கொரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமைகளை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டுமென போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார்.உலகம் முழுக்க கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும், சில நாடுகளில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏழை நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்வதற்காக, தடுப்பூசி காப்புரிமைகளை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.
தடுப்பூசி காப்புரிமைகளை ரத்து செய்ய அமெரிக்க அரசும் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தடுப்பூசி காப்புரிமைகளை ரத்து செய்ய போப் ஆண்டவரும் ஆதரவு தெரித்துள்ளார்.
உலகம் முழுவதும் எல்லா மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டுமென போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார். எனவே, தடுப்பூசி காப்புரிமைகளை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டுமென போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகளை உலகம் முழுவதும் பகிர்ந்துகொள்ள வேண்டுமென போப் ஆண்டவர் பேசி வருகிறார். மேலும், தடுப்பூசிகளை சுயநலத்துடன் பயன்படுத்துவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.