அமெரிக்கா சிறைகளில் 2,700க்கும் மேற்பட்ட கைதிகள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகளைவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு
அமெரிக்கா. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அமெரிக்க சிறைகள் மற்றும் தடுப்புக் காவல் மையங்களில் 2,700க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவல் தடுப்பு பணிகளை அமெரிக்க நீதித் துறை சரியாக கையாளவில்லை என விமர்சனங்கள் எழுதுள்ளன. கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் பல்லாயிரக்கணக்கான வழக்கு விசாரணைகளும், பரோல் விசாரணைகளும் ரத்து செய்யப்பட்டன.
கொரோனாவால் வேலையிழப்புகள் ஏற்பட்ட நிலையில் ஜாமீன் தொகை கூட செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கைதிகளின் குடும்பத்தினர் வேதனை தெரிவித்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் அளவுக்கு சிறையிலும் போதிய வசதிகள் இல்லாத நிலை நீடித்தது.
சில மாகாண அரசுகள் பாதுகாப்பு கருதி பல கைதிகளை விடுவித்தன. எனினும், பெரும்பாலான மாகாணங்கள் கைதிகளை விடுவிக்க விருப்பம் காட்டவில்லை. எனவே, சிறைகளில் கைதிகள் நிரம்பி வழிந்தனர். கூட்டம் மிகுதியால் சுகாதாரமும் பாதிக்கப்பட்டது. பல கைதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.