தனிமைப்படுத்தப்பட்ட 14 கிராமசேவகர் பிரிவுகள் விடுவிப்பு!

Date:

கம்பஹா, அம்பாறை, குருநாகல், திருகோணமலை மற்றும் களுத்துறை ஆகிய 5 மாவட்டங்களின் 14 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில், திவுலப்பிட்டி பொலிஸ் பிரிவில் அஸ்வென்னவத்த கிழக்கு கிராம சேவகர் பிரிவும், கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவில், ஹீரலு கெதர முதலான கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில், தெய்யத்தகண்டி பொலிஸ் பிரிவில் கதிராபுரம் கிராம சேவகர் பிரிவு, தெய்யத்தகண்டி கிராம சேவகர் பிரிவு சந்தன பகுதி, தெய்யத்தகண்டி கிராம சேவகர் பிரிவு தொலகந்த பிரிவு என்பன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

குருநாகல் மாவட்டத்தில், குமுபுகடே பொலிஸ் பிரிவில், தித்தவெல்கல மற்றும் நீராவிய முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில், உப்புவெளி பொலிஸ் பிரிவில் அன்புவழிபுரம் கிராம சேவகர் பிரிவும், திருகோணமலை பொலிஸ் பிரிவில், உவர்மலை, மட்கோ, லிங்கநகர் முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், சீனக்குடா பொலிஸ் பிரிவில், சீனக்குடா கிராம சேவகர் பிரிவு லங்காபாலம் மற்றும் தன்யாகம-01, காவட்டிகுடா கிராம சேவகர் பிரிவு சமன்புர, மீன்பிடி கிராமம் மற்றும் தன்யாகம-02 முதலான பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தில், பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் நாரம்பிட்டி கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்

பலாலி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்...

இலங்கைக் கடற்பரப்பில் தவிக்கும் ஈரானியக் கப்பல்களுக்கு உடனடியாக நேசக்கரம் நீட்டுக!

வளைகுடா நாடுகளில் நிலவும் தொடர்ச்சியான அதிகாரப் போராட்டங்கள் மற்றும் மோதல் நிலைகள்...

களுத்துறை நாகொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வாழைச்சேனையில் கைது!

களுத்துறை நாகொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்