உத்தரபிரதேச மாநிலத்தின் பைரியா சட்டமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவருமான சுரேந்தர் சிங், மாட்டு கோமியம் குடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அந்த வீடியோவில் கொரோனாவால் நாட்டு மக்கள் பெரும் பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் கோமியம் குடிக்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோமியத்தை எப்படி பருக வேண்டும், எந்த நேரத்தில் குடிக்க வேண்டும், எப்படி எல்லாம் உடலுக்குள் அது செயல்படுகிறது என்ற விளக்கத்தையும் கூறியுள்ளார்.
ஒரு நாளில் 18 மணி நேரத்திற்கும் மேலாக உழைத்தும் தான் ஆரோக்கியமாக இருக்க காரணம் கோமியம் குடிப்பதுதான் என்றும், கொரோனா பாதிப்பு இதுவரை தனக்கு ஏற்படவில்லை என எம்எல்ஏ சுரேந்திர சிங் கூறியுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1