26.8 C
Jaffna
December 15, 2024
Pagetamil
தொழில்நுட்பம்

Twitter Tip Jar உலகளவில் அறிமுகம்! இந்த அம்சம் எதற்கு தெரியுமா?

பிரபல சமூக ஊடக தளமான ட்விட்டர் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ட்விட்டரில் ஒரு குறிப்பிட்ட அளவிலான பின்தொடர்பவர்களை கொண்டிருப்பவர்களின் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால், ‘டிப்ஸ்’ அதாவது அன்பளிப்பாக பணம் கொடுக்கலாம்.

இந்த அம்சத்தை மே 6 ஆம் தேதி ட்விட்டர் அறிமுகம் செய்துள்ளது. இது இப்போதைக்கு சில பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. அதன்படி நிருபர்கள், வல்லுநர்கள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் ஆங்கிலத்தில் பதிவுகளை உருவாக்குபவர்கள் போன்ற சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது.

இந்த அம்சம் கிடைக்கும் பயனர்கள் தங்கள் கணக்கில் “Tip Jar” அம்சத்தை சேர்த்துக்கொள்ளலாம். iOS மற்றும் ஆன்ட்ராய்டு இரண்டு இயங்குதளங்களிலுமே “Tip Jar” அம்சம் கிடைக்கிறது. Bandcamp, CashApp, Patreon, Paypal மற்றும் Venmo போன்ற பண பரிமாற்ற தளங்களுக்கான ஆதரவை மட்டுமே ட்விட்டர் இப்போதைக்கு கொண்டுள்ளது. மேலும் பல கொடுப்பவனவு தளங்களுக்கான ஆதரவைச் சேர்க்கவும் நிறுவனம் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது.

நிறுவனத்தின் மூத்த தயாரிப்பு மேலாளர் எஸ்தர் கிராஃபோர்ட் இது குறித்து, ட்விட்டரில் தனிப்பயனாக்கம் மற்றும் பின்தொடர்தல் போன்ற செயல்முறைகளோடு மற்றவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த Tip Jar அம்சம் மூலம் பயனீட்டாளருக்கு வழங்கப்படும் பணத்தில் ட்விட்டர் நிறுவனத்துக்கு எந்தவொரு பங்கும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அம்சம் விரைவில் அதிகமானவர்களுக்கு கிடைக்கும் என்றும் எஸ்தர் கிராஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மைக்ரோசொப்ட் விண்டோஸ் செயலிழப்பு – ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ சிக்கலும், சில புரிதல்களும்

Pagetamil

இந்தியராணுவத்தில் 51 கிலோ எடை கொண்ட ரோபோ நாய்கள்!

Pagetamil

Gemini AI மொடல் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் கூகுள்?

Pagetamil

ருவிட்டரின் லோகோவை ‘X’ என மாற்றிய எலான் மஸ்க்!

Pagetamil

ருவிட்டருக்கு மாற்றாக மெட்டாவின் த்ரெட்ஸ் அறிமுகம்!

Pagetamil

Leave a Comment