மருத்துவ முறைகள் மூலம் தங்களது ஊட்டச்சத்து முறைகளை நிறைவு செய்வதற்கு பதிலாக சமையலறை வாயிலாகவே நமது ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என நாம் நினைக்கின்றோம். ஆனால் எல்லா நேரங்களிலும் இந்த வழி உதவுவது இல்லை. மல்டி விட்டமின் கொண்ட முக்கியமான சத்துள்ள சில உணவு பொருட்களை பற்றி இப்போது நாம் விரிவாக பார்ப்போம்.
சில நேரங்களில் நமக்கு அதைவிட அதிகமான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. முக்கியமாக கர்ப்பம் மாதவிடாய் நிறுத்தம் போன்ற நேரங்களில் நமக்கு அதிகமான அளவில் ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்ற
விட்டமின் குறைப்பாடு என்பது பொதுவாக நாள்ப்பட்ட நோய்களுடன் தொடர்புடையதாக இருப்பதாக 2002 ஆம் ஆண்டு ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் முழுமையான உணவானது உங்களுக்கு தினசரி தேவையான ஊட்டச்சத்தை நிரப்புவதற்கு போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். அங்குதான் நமக்கு பயன்பட கூடிய ஒன்றாக மல்டி வைட்டமின்கள் உள்ளன.
வைட்டமின் குறைபாடு
துவக்கத்தில் தினசரி மல்டி வைட்டமின்கள் உங்கள் ஆரோக்கியத்தில் நல்ல வளர்ச்சியை கொடுக்கும். நீங்கள் மன அழுத்தத்தை சந்திக்கும் போது சரியான அளவில் தூங்காதப்போது வழக்கமான உடற்பயிற்சியை கூட செய்யாமல் இருக்கும்போது கூட இந்த மல்டி வைட்டமின் மாத்திரைகள் உங்களை பாதுக்காக்கின்றன. மேலும் உடலானது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் இது உதவுகிறது.
ஆனால் மல்டி வைட்டமின்களில் பல காம்போக்கள் உள்ளதால் ஒரு மல்டி வைட்டமினை வாங்கும்போது அது எவ்வாறு நமக்கு உதவும் என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும். எனவே உங்களுக்கு உதவுவதற்காக ஏழு பொருட்களை நாங்கள் வரிசைப்படுத்தியுள்ளோம். மல்டி வைட்டமின் தேர்ந்தெடுத்தலில் இது உங்களுக்கு உதவக்கூடும்.
விட்டமின் டி
எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமான கால்சியத்தை உறிஞ்சிவதற்கு வைட்டமின் டியே நமது உடலுக்கு உதவுகிறது. இந்த வைட்டமின் டி உடலுக்கு போதுமான அளவில் கிடைக்கவில்லை எனில் அதனால் பல பிரச்சனைகள் ஏற்படும்.
நோய் வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்
எலும்பு மற்றும் முதுகுவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்
முடி உதிர்தல்
நீங்கள் எளிதாக வைட்டமின் டியை எடுத்துக்கொள்ள வேண்டும் எனில் 15 நிமிடங்களுக்கு சூரிய ஒளியில் இருப்பது மூலம் அதை பெற முடியும் என்றாலும் உண்மை என்னவெனில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இதை சரியாக செய்வதில்லை. மேலும் குளிர்கால பகுதியில் உள்ளவர்கள், தினமும் 9 மணி நேரம் வரை வேலை செய்பவர்கள் ஆகியோர்களுக்கு இதற்கான வாய்ப்புகள் அமைவதில்லை.
சூரிய குளியல் எடுக்கும் பலரும் சன்ஸ்கிரின் பயன்படுத்துகின்றனர். இது வைட்டமின் டியை சூரிய ஒளியில் இருந்து பெறுவதை கடினமாக்குகிறது. இந்த வைட்டமினை தேவையான அளவில் உணவில் இருந்து பெறுவதும் கடினமே. எனவே இவற்றை மல்டி விட்டமின் வழி பெறுவது முக்கியமாகும்
விட்டமின் டி கொண்ட சில உணவுகள்
கொழுப்பு நிறைந்த மீன்கள்
முட்டையின் மஞ்சள் கரு
பால், தானியங்கள் போன்ற உணவுகள்
உதவிக்குறிப்பு:
கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், 1 முதல் 13 வயது குழந்தைகள் மற்றும் 19 முதல் 70 வரை உள்ளவர்கள் ஆகியோர் ஒரு நாளைக்கு 600 ஐயு வைட்டமின் டியை பெற வேண்டும் என்று தேசிய சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. அதற்கு மேல் வயதானவர்கள் 800 ஐயு பெற வேண்டும்.
மெக்னீசியம்
மெக்னீசியம் உடலுக்கு தேவையான ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். இதை நாம் உணவு அல்லது வேறு கூடுதல் பொருட்களில் இருந்து பெற முடியும். உடலில் எலும்பு ஆரோக்கியம் மற்றும் ஆற்றல் உற்பத்திக்கு உதவக்கூடிய முக்கியமான ஊட்டச்சத்தாக மெக்னீசியம் உள்ளது. மெக்னீசியமானது உடலில் மேலும் பல நன்மைகளை உருவாக்குகின்றன.
இது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தை குறைக்கிறது.
தூக்க தொடர்பாக உள்ள பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
தசை மற்றும் நரம்பு செயல்ப்பாட்டை ஒழுங்குப்படுத்த உதவுகிறது.
இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்துகிறது
புரதம், எலும்பு மற்றும் டி.என்.ஏ ஆகியவற்றின் மேம்பாட்டிற்கு உதவுகிறது.
உலகில் நிறைய பேர் மெக்னீசியம் குறைப்பாட்டை உடையவர்களாக உள்ளனர். ஏனெனில் அவர்கள் சரியான உணவுகளை சாப்பிடுவதில்லை. கூடுதல் மெக்னீசியம் வேண்டும் என்பவர்கள் பூசணி, கீரை, கூனைப்பூ, சோயா பீன்ஸ், விதைகள் ஆகியவற்றை சாப்பிட முயற்சிக்கலாம்.
பெரியவர்களுக்கு 350 மி.கி அளவில் தினசரி மெக்னீசியம் தேவைப்படுகிறது. அஸ்பார்டேட், சிட்ரேட், லாக்டேட் மற்றும் குளோரைடு ஆகியவை இவற்றின் சிறந்த ஆதாரங்களாக உள்ளன.
கல்சியம்
அமெரிக்க மக்கள் தொகையில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் அவர்களின் உணவில் இருந்து போதுமான அளவில் கால்சியத்தை பெறுவதில்லை. வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு தேவையான தாதுப்பொருட்களாக கால்சியம் உள்ளது. குறிப்பாக பெண்கள் இதனால் சீக்கிரமே எலும்பின் அடர்த்தியை இழக்க துவங்குகின்றனர்.
ஆரம்பத்தில் இருந்தே போதுமான அளவில் கால்சியம் பெறுவது என்பது உடலுக்கு நன்மை பயக்க கூடிய செயலாகும்.
கால்சியம் கொண்ட உணவுகள்
வலுவூட்டப்பட்ட தானியங்கள்
பால், பாலாடை கட்டி மற்றும் தயிர்
உப்பு மீன் (கருவாடு)
ப்ரோக்கோலி
விதைகள்
பீன்ஸ் மற்றும் பயறு
இந்த உணவுகளை நீங்கள் அதிகமாக உண்கிறீர்கள் என்றால் நீங்கள் போதுமான அளவில் கால்சியத்தை பெறுகிறீர்கள் என அர்த்தம்.
ஒரு நாளைக்கு பரிந்துரைக்கப்பட்ட கால்சியம் அளவானது 1000 மி.கி ஆகும். உங்கள் கால்சியம் தேவைகள் அனைத்தையும் ஒரு மல்டிவைட்டமினில் இருந்து நீங்கள் பெற முடியும்.
இரும்பு
கண்டிப்பாக இரும்பு உங்கள் மல்டி வைட்டமினில் இருக்க வேண்டும். ஆனால் அனைவருக்கும் ஒரே அளவில் இரும்பு சத்து தேவைப்படுவதில்லை. இரும்பு சத்தின் நன்மைகள் என நாம் பார்த்தால்
ஆற்றல் அதிகரிப்பு
சிறந்த மூளை செயல்ப்பாடு
ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்கள்
சிவப்பு இறைச்சியை சாப்பிடுபவர்கள் பொதுவாக போதுமான அளவு இரும்பு சத்தை பெறுகின்றனர். ஆனால் மாதவிடாய் சுழற்சி, பருவமடைதல், கர்ப்பமாக இருப்பது போன்ற சில சூழ்நிலைகளில் உங்களுக்கு இரும்பு சத்தின் தேவையானது அதிகமாக இருக்கலாம்.
எனவே சைவ உணவு உண்பவர்கள் மற்றும் வீகன் போன்றவர்கள் தங்கள் மல்டி வைட்டமினில் இரும்புச்சத்து இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். குறிப்பாக அவர்கள் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளான இறைச்சியை உண்ணாத பட்சத்தில் கண்டிப்பாக மல்டி வைட்டமினில் அதை சேர்த்துக்கொள்ளவும்.
இரும்பு சல்பேட், இரும்பு குளுக்கோனேட், ஃபெரிக் சிட்ரேட் அல்லது ஃபெரிக் சல்பேட் வடிவில் சுமார் 18 மி.கி இரும்புச்சத்தை பெறலாம் என மருத்துவர் வால்டெஸ் கூறுகிறார். அதற்கு மேல் இரும்பை எடுத்துக்கொள்வது குமட்டலை ஏற்படுத்தும்.
ஃபோலேட்
ஃபோலேட் ஆனது ஃபோலிக் அமிலம் எனவும் அழைக்கப்படுகிறது. கரு வளர்ச்சிக்கு உதவுவதோடு பிறப்பு கட்டுப்பாடுகளை தடுப்பதற்கும் மிகவும் பிரபலமானதாக உள்ளது. நீங்கள் மன சோர்வை எதிர்த்து போராடுகிறீர்கள் என்றால் அல்லது வீக்கத்தை எதிர்த்து போராடுகிறீர்கள் என்றால் உங்களுக்கு ஃபோலெட் முக்கியமானதாக இருக்கும்.
ஃபோலெட் சத்து கொண்ட உணவுகள்
இலை கீரைகள்
வெண்ணெய்
பீன்ஸ்
சிட்ரஸ் பழங்கள்
நீங்கள் கர்ப்பமாக இருந்தால் 400 அல்லது 600 எம்.சி.ஜி அளவில் ஃபோலேட் எடுத்துக்கொள்ளலாம். எனவே மல்டி வைட்டமின் வாங்கும்போது அதில் ஃபோலெட்டின் அளவை பார்க்க தவறி விடாதீர்கள். நீங்கள் உணவின் வழியாக ஃபோலெட்டை எடுத்துக்கொள்ளும்போது அதில் 85 சதவீதம் உறிஞ்சப்படுகிறது. ஆனால் வெறும் வயிற்றில் அதை எடுத்துக்கொண்டால் 100 சதவீதமும் உறிஞ்சப்படும்.
விட்டமின் பி 12
விட்டமின் பி12 ஆனது ஆற்றல் உடைத்தலுக்கு உதவுகிறது. வைட்டமின் பி 12 உடலின் நரம்பு மற்றும் இரத்த அணுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் அனைத்து உயிரினங்களிலும் மரபணு பொருளான டி.என்.ஏ வை உருவாக்க இது உதவுகிறது. சைவ உணவு உண்பவர்கள் மற்றும் வீகன்கள் அதிகமாக வைட்டமின் பி 12 குறைப்பாட்டால் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் பெரும்பாலும் இறைச்சி, கோழி, மீன் மற்றும் முட்டை போன்ற உணவுகளிலேயே வைட்டமின் பி 12 உள்ளது.
குறிப்பு
விட்டமின் பி 12 ஐ பொருத்தவரை பரிந்துரைக்கப்பட்ட அளவாக 3 எம்.சி.ஜி க்கும் குறைவாக உள்ளது. எனவே ஒரு வேளைக்கு 1 முதல் 3 எம்.சி.ஜி ஆகியவை போதுமானது ஆகும். ஏனெனில் நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது உங்கள் உடலானது கூடுதல் பி 12 ஐ அகற்றும். பி 12 இல் பல வடிவங்கள் உள்ளன. எனவே உடலுக்கு தேவையான அளவில் வைட்டமின் பி 12 ஐ எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. மல்டி விட்டமின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டாம்.
கூறுவதற்கு இது வெளிப்படையாக இருந்தாலும் விட்டமின் மற்றும் தாதுக்களை முதலில் உணவில் இருந்து பெறுவதே நல்லது. நம் உடல்கள் நாம் உண்ணும் உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை பெறுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் நாம் சீரான உணவை உண்ணும்போது நமக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் அதில் நாம் பெற முடியும்.