கொல்கத்தா வீரர் பிரசித் கிருஷ்ணாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பாதி தொடர் முடிந்துள்ள நிலையில் எஞ்சியுள்ள தொடர் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணாவிற்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் இங்கிலாந்து தொடரில் பேக்கப் வீரர்களில் ஒருவராக பிரசித் கிருஷ்ணா உள்ளார்.
இந்நிலையில் இவருக்கு கொரோனா வைரஸ் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நான்காவது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நான்காவது வீரராக உள்ளார் பிரசித். இது தொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “பிரசித் கிருஷ்ணாவிற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்”என்றார்.
முன்னதாகவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் மற்றும் டிம் செய்ஃபெர்ட் ஆகியோருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் பயிற்சியின் போது வருண் சக்கரவர்த்தியுடன் தொடர்பில் இருந்ததால் பிரசித் கிருஷ்ணா மற்றும் சந்தீப் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கிருஷ்ணா வருண் சக்கரவர்த்தியின் நெருங்கிய நண்பர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் மே 25 முதல் இங்கிலாந்து தொடர் செல்லும் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்ட உள்ளதால் அதற்கு முன் பிரசித் கிருஷ்ணா முழுவதுமாக குணமடைந்து திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.