மகாராஷ்டிரா முதல்வருடன் கொரோனா நிலைமை குறித்து பிரதமர் மோடி கலந்துரையாடல்..

Date:

பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் மாநிலத்தின் கொரோனா நிலைமை குறித்து பேசினார்.டந்த மார்ச் இறுதியில் இந்தியாவில் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் மூலமே கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைய ஆரம்பித்தது. இது தற்போது நாடு முழுவதும் கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பல மாநிலங்கள், மாநிலம் தழுவிய முழு ஊரடங்கை அறிவித்துள்ளதால், பொருளாதார ரீதியாக மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்வதும் ஒரு பக்கம் இருக்கையில், கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் போவது, ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட சுகாதாரத்துறை சார்ந்த பிரச்சினைகளும் பெரிய அளவில் உள்ளது.

இந்த சிக்கல்களைக் களைய மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி, கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் முதல்வர்களுடன் பேசி வருகிறார்.

அந்த வகையில் இன்று, கொரோனா அதிகம் பாதித்த மாநிலமான மகாராஷ்டிராவின் முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் பேசி, மகாராஷ்டிராவின் கொரோனா நிலைமை குறித்து விவாதித்தார்.

கொரோனா நோய்த்தொற்றுகளின் இரண்டாவது அலையின் போது மகாராஷ்டிரா மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. மும்பை உட்பட அதன் சில நகரங்களில் கொரோனா கட்டுப்பாடு சீரான முன்னேற்றத்தைக் கண்டிருந்தாலும், மாநிலத்தின் பல பகுதிகளின் நிலைமை கவலைக்குரியதாகவே உள்ளது.சமீபத்திய புதுப்பிப்பின்படி, ஒரு நாளில் 54,000’க்கும் மேற்பட்ட புதிய கொரோனா பாதிப்புகள் மகாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

“எம்.எஸ்.வி முதல் அனிருத் வரை பாடிய கானகோகிலம்” – எஸ்.ஜானகி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

இந்திய திரையுலகின் புகழ்பெற்ற பாடகரான எஸ்.ஜானகி மறைவுக்கு முன்னாள் முதல்வரும் திமுக...

திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்.ஜானகி மறைவு

இந்திய திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்.ஜானகி காலமானார். அவருக்கு வயது 88....

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை: பெண் கைதிகள் அனைவரும் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை கட்டடங்களுக்கு பாரிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்