இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால் சில கிலோ எடை குறைய வேண்டும் என பிரித்வி ஷாவிற்கு அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதெச கிரிக்கெட் அரங்கில் திறமையான வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் பிரித்வீ ஷா ஆவார். டெஸ்ட் போட்டிகளாக இருந்தாலும் சரி டி20 போட்டிகள் இருந்தாலும் சரி தனது திறமையை நிரூபிக்க பிரித்வி ஷா தவறியது இல்லை என்று சொல்லலாம். தற்போது இந்தியாவில் நடத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் இவரின் சிறப்பான ஆட்டத்தை காண முடிந்தது. ஆனால் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்த போதிலும் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் அணித் தேர்வில் பிரித்வி ஷா தொடர்ந்து ஒதுக்கப்பட்டு வருகிறார்.
இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இவர் பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில் இவர் மீண்டும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால் சில கிலோ எடை குறைய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது டெஸ்ட் பயணத்தை மிக சிறப்பாக துவங்கிய போதும் அடுத்தடுத்து சில மோசமான தொடர்களால் இந்திய அணியில் தனது இடத்தை இழந்தார் பிரித்வீ ஷா.
இது தொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “21 வயதுக்கு உள்ள ஒரு நபர் செயல்படுவதை விட பிரித்வீ ஷா மிகவும் மெதுவாகவே செயல்படுகிறார். அதனால் அவர் சில கிலோ எடை குறைய வேண்டியது அவசியமாக உள்ளது. அதேபோல தொடரின் போது அவருக்கு பில்டிங்கில் கவனக்குறைவு இருந்தது தெரிந்தது. தற்போது மீண்டும் இந்தியா வந்தவுடன் ஷா அதற்காக கடினமாக பாடுபட்டு உள்ளார். அவருக்கு முன்பாக ரிஷப் பண்ட் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக உள்ளார். ஒரு சில மாதங்களில் ரிஷப் பண்ட் இப்படி ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்றால் பிரித்வீ ஷாவும் ஏற்படுத்த முடியும்.
இன்னும் சில தொடர்களில் அவரது இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான திறமையை அவர் அழுத்தமாக நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சிறந்த தொடருக்காக ஒரு தேர்வு செய்ய போட்டுக்கொள்ளும் அடுத்தடுத்து வாய்ப்புகளை கோட்டை விட்டார் . இப்படி ஒரு சிறந்த வீரர் அடுத்தடுத்த தொடர்களை தொடர்பான வாய்ப்புகளை இழப்பது மிகவும் அரிது” என்றார்.