பிரபல சினிமா பின்னணி பாடகி சுனிதா, இயக்குனர் ஒருவர் தவறாக நடக்க முயன்றதாக புகார் தெரிவித்துள்ளார்.
பிரபல சினிமா பின்னணி பாடகி சுனிதா, இவர் தமிழில் ‘காதல் ரோஜாவே’ படத்தில் ‘நினைத்த வரம்’ பாடலையும் பத்ரி படத்தில் ‘காதல் சொல்வது உதடுகள் இல்லை’ பாடலையும் பாடி பிரபலமானார்.
தெலுங்கு, கன்னட மொழி படங்களில் அதிக பாடல்கள் பாடி இருக்கிறார். இந்த நிலையில் இயக்குனர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக சுனிதா புகார் கூறியுள்ளார்.
இது குறித்து சுனிதா அளித்துள்ள பேட்டியில், “நான் ஒரு படத்துக்காக டப்பிங் பேச ஸ்டூடியோவுக்கு சென்றபோது அந்த படத்தின் இயக்குனர் மரியாதையோடு மேடம் என்று சொல்லி அழைத்தார். நான் உங்கள் தீவிர ரசிகன். எனது படத்தில் நீங்கள் பணியாற்றுவது என்னுடைய அதிர்ஷ்டம் என்றார்.
ஆனால் சில நாட்களுக்கு பிறகு, டப்பிங் பேசிய என்னிடம் வந்து, சுனிதா என்று பெயர் சொல்லி அழைத்தார். வேலையை முடித்து கிளம்ப தயாரானதும் புஜ்ஜி, கண்ணா என்று அழைக்க தொடங்கினார். ஆரம்பத்தில் மரியாதையோடு பேசிய அவர் பிறகு செல்லப்பெயர் வைத்து அழைத்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் மவுனமாக இருந்தேன்” என்றார்.
சுனிதா குற்றம் சாட்டிய இயக்குனர் யார் என்ற தகவல் வெளியாகவில்லை.