இன்றைய வானிலை!

Date:

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, மேல், ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : காங்கேசந்துறையில் இருந்து மன்னார் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றானது தெற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளில் இருந்து வீசக்கூடும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு திசையில் இருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

கடல் நிலை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

spot_imgspot_img

More like this
Related

பாம்பு கடித்த நாவல்பழத்தை சாப்பிட்ட சிறுவன் பலி

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை...

பாடசாலைகளிலும் போதைப்பொருள் சோதனை!

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருட்களைக் கண்டறியும் சோதனைகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள்...

சமூக ஊடகங்களில் பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பியவர் கைது!

சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பரப்பியதற்காக, கினிகத்ஹேன பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்