வைத்தியசாலையில் உயிரிழந்தவரின் சடலம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் கொரோனா தொற்று தகவல்: யாழில் பெரும் குழப்பம்!

Date:

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த முதியவரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட பின்னர், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சை பிிவில் யாழ் நகரை சேர்ந்த 77 வயது முதியவர் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக துரித அன்டிஜன் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்று இல்லையென தெரிய வந்தது.

எனினும், அவரிடம் பிசிஆர் மாதிரி பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

அவர் அன்று 7வது விடுதிக்கு மாற்றப்பட்டு, அன்றைய தினமே 9வது விடுதிக்கு மாற்றப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று (5) காலை உயிரிழந்தார்.

நேற்று பகல் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நேற்று மாலை வெளியான பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து, அவரது சடலத்தை சுகாதார விதிமுறைகளின் படி தகனம் செய்ய நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் நிலைமையினால் இறுதிச்சடங்கில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்...

ஒக்டோபர் 17ஆம் திகதி வழக்கு விசாரணையின் பின்னரே பூரண நிம்மதி கிடைக்கும் என அனோஜனின் சகோதரன்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண...

சட்டப்படியே ஞானசாரரை மன்னித்தேன்

அரசியலமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படியே, ஞானசார தேரருக்குத் தான் பொதுமன்னிப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்