24.2 C
Jaffna
December 17, 2024
Pagetamil
லைவ் ஸ்டைல்

முகப்பரு குணமாக வாழைப்பழத்தோல் வைத்தியம்!

முகப்பருவுக்கு சிகிச்சையளிக்க விரும்பினால் வாழைப்பழம் போதும். ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதை சரியான முறையில் பயன்படுத்தினால் பலனை பெறமுடியும்.

முகப்பரு பிரச்சனைக்கு பல தீர்வுகள் உண்டு. ஆனால் எப்போதும் பலனளிக்க கூடியது என்றால் அது இயற்கை முறை மட்டும் தான். சருமம் எத்தகைய சருமமாக இருந்தாலும் அதற்கேற்ற பராமரிப்பை மேற்கொண்டால் முகப்பரு தடம் இல்லாமல் செய்து விடமுடியும்.

முகப்பருவை போக்க முழுமையாக வாழைப்பழத்தோல் உதவும். வாழைப்பழத்தோலில் லுடின் என்னும் ஆஸ்கிஜனேற்றங்கள் உள்ளது. இது சூரியனை போன்று சருமட்துக்கு சேதத்தை ஏற்படுத்துவதை குறைக்க செய்யும். இதனால் சரும தோலழற்சி தடுக்கப்படும். வாழைபப்ழத்தோ துத்தநாகத்தின் சிறந்த மூலமும் கூட. அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை மட்டும் தெரிந்துகொள்வோம்.

வாழைப்பழத்தோலின் முனைகளை நீக்கி அதை இரண்டு அல்லது மூன்றாக நறுக்கி வைக்கவும். முகத்தை சுத்தம் செய்து க்ளென்சர் மூலம் கழுவவும். இதை ஒரு துண்டுடன் உலர வைக்கவும். முகத்தில் எல்லா இடங்களிலும் குறிப்பாக முகப்பரு இருக்கும் இடங்களில் 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.

வாழைப்பழத்துண்டு பழுப்பு நிறமாக மாறினால் மீண்டும் புதிய தோலை கொண்டு துடைக்கவும். 20 நிமிடங்கள் கழித்து பிறகு முகத்தை கழுவி எடுக்கவும். தினமும் ஒரு முறை செய்து வந்தால் போதும்.

வாழைப்பழத்தோல் கொழுப்பு அமிலம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கத்துடன் இருப்பதால் இது சரும ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்கிறது. இது சரும சிவப்பிலிருந்து விடுபட உதவுகிறது. முகப்பரு விரைவாக குணப்படுத்தி அதை தடுக்கவும் செய்கிறது.

தேவை

வாழைப்பழத்தோல் –

ஓட்ஸ் – கால் கப்

சர்க்கரை – 2 டீஸ்பூன்

மென்மையான பேஸ்ட் பதத்துக்கு கிடைக்கும் வரை வாழைப்பழத்தோல் மற்றும் ஓட்ஸ் சர்க்கரை அனைத்தையும் கலக்கி எடுக்கவும் இதை முகத்தில் தடவி பிறகு முகத்தை வட்ட இயக்கங்களில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும். பிறகு எண்ணெய் இல்லாத மாய்சுரைசர் பயன்படுத்துங்கள். தினமும் ஒரு முறை இதை செய்து வந்தால் பலன் கிடைக்கும்.

சிறந்த முகப்பரு எதிர்ப்பு ஸ்க்ரப் ஆக இது செயல்படுகிறது. சருமத்தை அழகாக்க செய்கிறது. முகப்பருவை தடுக்கும் திறனை கொண்டுள்ளது என்பதை பயன்படுத்திய பிறகு நீங்களே உணர்வீர்கள்.

தேவை

எலுமிச்சைச்சாறு – தேவைக்கு

வாழைப்பழத்தோல் – தேவைக்கு

வாழைப்பழத்தோலை நன்றாக பிசைந்து எலுமிச்சை சாறு சேர்த்து மசிக்கவும். பிறகு சுத்தமான காட்டனை நனைத்து சருமத்தின் பாதிக்கப்பட்ட இடத்தில் இந்த பேஸ்ட்டை பயன்படுத்தவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி உலர விடவும். தினமும் ஒருமுறை இதை செய்யலாம்.

எலுமிச்சை இயற்கையாகவே அமிலத்தன்மை வாய்ந்தது இது உங்கள் சருமத்தில் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீயாக்களை கொல்ல உதவுகிறது இது சிறந்த ப்ளீச்சிங் தன்மை கொண்டது. இது முகப்பரு வடுக்களை குறைக்க செய்கிறது.

தேவை

வாழைப்பழத்தோல் மசித்தது – 1 டீஸ்பூன்

பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்

இரண்டையும் மென்மையான பேஸ்ட் பதத்துக்கு மாறும் வரை நன்றாக கலக்கி எடுக்கவும். இந்த கலவை சருமத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி 5 நிமிடங்கள் கழித்து பிறகு மந்தமான நீரில் கழுவி எடுக்கவும். பிறகு எண்ணெய் இல்லாத மாய்சுரைசர் பயன்படுத்தவும். தினமும் ஒருமுறை இதை செய்யலாம்.

பேக்கிங் பவுடர் சருமதுளைகளில் நச்சுகளை நீக்குகிறது. இது முகப்பருவை உலர வைக்கிறது, சரும சிவப்பை குறைக்க செய்கிறது. சருமத்திலிருந்து எண்ணெய் பசையை வெளியேற்றி முகப்பருவை தடுக்கிறது.

தேவை

மசித்த வாழைப்பழத்தோல் – 1 டீஸ்பூன்

மஞ்சள் – 1 டீஸ்பூன்

இரண்டும் மென்மையான பேஸ்ட் பதத்துக்கு குழைத்து எடுக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி பிறகு வட்ட இயக்கங்களில் சருமத்தை மென்மையாக மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி எடுக்கவும். பிறகு எண்ணெய் இல்லாத மாய்சுரைசர் பயன்படுத்தவும்.

மஞ்சள் சிறந்த பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி பண்புகள் கொண்டுள்ளது. இது வாழைப்பழத்தோலுடன் இணைந்து வீக்கத்தை குறைக்க உதவுகிறது. சருமத்தில் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்றக்கூடும்.

​தேவை

வாழைப்பழத்தோல் மசித்தது – 1 டீஸ்பூன்

தேன் – 2 டீஸ்பூன்

இரண்டும் மென்மையான பேஸ்ட் பதத்துக்கு மாறும் வரை நன்றாக கலக்கி எடுக்கவும். பிறகு முகப்பரு இருக்கும் இடங்களில் தடவி மென்மையாக மசாஜ் செய்த பிறகு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை மந்தமான நீரில் கழுவி எடுக்கவும். பிறகு எண்ணெய் இல்லாத மாய்சுரைசர் பயன்படுத்தவும்.

தேன் சிறந்த பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க செய்கிறது. சருமத்தை வெளுக்கும் பண்புகளை கொண்டுள்ளதால் இது முகப்பரு வடுக்களை நீக்கி விடும்.

இனி வாழைப்பழம் சாப்பிடும் போது அதன் தோலை சருமத்துக்கு பயன்படுத்துங்கள். சருமத்தில் உண்டாகும் மாற்றத்தை ஆச்சரியமாக உணர்வீர்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment