நடிகர் அஜித் குமார் மற்றும் பாடகர் எஸ்.பி.பி சரண் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித் பற்றிய எந்த செய்தி வந்தாலும் அது உடனே ஹிட் ஆகி விடுவது வழக்கம். அவரது பழைய புகைப்படங்கள் எப்போதாவது கிடைத்தால் அதை ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கிவிடுவார்கள்.
தற்போது அஜித்தின் பதின் பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அஜித் உடன் பாடகர் எஸ்.பி.பி. சரணும் உடன் இருக்கிறார்.
எஸ்.பி.பி. மகன் சரணும், அஜித்தும் ஒரே பள்ளியில் தான் படித்தார்கள். எனவே இருவரும் நெருங்கிய நண்பர்கள். சரண் குடும்பத்தினருடன் அஜித் எப்போதும் நெருக்கமாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.




