இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிகபட்ச கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று (5) பதிவாகியது.
நேற்று 1,939 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 117,529 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 1,897 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். வெளிநாட்டிடிலிருந்து நாடு திரும்பிய 42 பேரும் தொற்றிற்குள்ளாகினர்.
தற்போது நாடு முழுவதும் 16,734 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று,தொற்றிலிருந்து குணமடைந்த 922 பேர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 100,075 ஆக உயர்ந்தது. தொற்று சந்தேகத்தில் 1,343 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.




