கொரோனா நிவாரண தொகையாக 50 கோடி ரூபாயை அறிவித்து உள்ளது ஸ்டார் நெட்வேர்க்.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் பல லட்சம் மக்கள் தினம்தோறும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தினமும் உயிரிழப்புகளும் மிக அதிக அளவில் இருந்து வருகிறது. மருத்துவ சிகிச்சைக்கான ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து, படுக்கை தட்டுப்பாடு நாடு முழுவதும் நிலவி வருகிறது.
கொரோனா நிவாரணத்திற்காக தற்போது ஸ்டார் டிவி இந்தியா தற்போது 50 கோடி ருபாய் ஒதுக்குவதாக அறிவித்து உள்ளது. அவசரகால மருத்துவ உபகாரணங்கள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்ட்டு உள்ளது.
கடந்த வருடம் ஸ்டார் டிவி இந்தியா 28 கோடி ருபாய் கொரோனா நிவாரணத்திற்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் இன்னும் கூடுதலாக தொகையை வழங்கி இருக்கிறார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1