31.1 C
Jaffna
April 14, 2025
Pagetamil
உலகம்

மாலி நாட்டைச் சேர்ந்த இளம்பெண்ணிற்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்!

25 வயதான இளம்பெண் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த நிகழ்வு ஒட்டுமொத்த உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஹலிமா சிஸ்ஸி(25). இவர் கர்ப்பமாக இருந்த நிலையில் வயிற்றில் ஸ்கேன் செய்து பார்த்த போது, 7 குழந்தைகள் பிறக்கவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இத்தனை குழந்தைகள் வயிற்றில் இருக்கும் தகவல் அந்நாட்டில் பெரும் வைரலானது. இதுபற்றி தகவலறிந்த மாலி அரசு, ஹலிமா சிஸ்ஸிக்கு உரிய முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்க கடந்த மார்ச் 30ஆம் தேதி மொராக்கோ நாட்டிற்கு அழைத்துச் சென்றது.

அவருடன் மாலி அரசு மருத்துவர் ஒருவரும் உடன் சென்றார். இதையடுத்து மொராக்கோவில் அனைத்து வசதிகளுடன் அரசின் செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அப்பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவருக்கு பிரசவம் பார்த்ததில் மொத்தம் 9 குழந்தைகள் பிறந்துள்ளன. இதைக் கண்டு மருத்துவர்களே ஆச்சரியமடைந்தனர். இதில் 5 பெண் குழந்தைகள், 4 ஆண் குழந்தைகள் அடங்குவர்.

வயிற்றில் அதிகப்படியான குழந்தைகள் இருந்ததை அறிந்த மருத்துவர்கள், தாயின் உடல்நிலையை எண்ணி கவலை அடைந்திருந்தனர். மேலும் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் உயிர் பிழைக்க வேண்டும் என்றும் விரும்பினர். இந்த சூழலில் எந்தவொரு பாதிப்புமின்றி தாயும், குழந்தைகளும் நலமுடன் இருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக மாலி நாட்டின்
சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

மாலியிலும், மொரோக்காவிலும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. இரண்டிலுமே வயிற்றில் 7 குழந்தைகள் மட்டுமே இருப்பதாக முடிவுகள் தெரிவித்தன. ஆனால் அறுவை சிகிச்சை மூலம் சிஸ்ஸிக்கு 5 பெண் குழந்தைகளும், 4 ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளன. தற்போது தாயும், குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பேசிய மாலி சுகாதாரத்துறை அமைச்சர் பாண்டா சிபி, இளம்பெண் சிஸ்ஸிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினருக்கு நன்றி. அடுத்த சில வாரங்களில் தாயும், குழந்தைகளும் சொந்த ஊர் திரும்பவுள்ளதாக கூறினார். ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் என்பது அரிதிலும் அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்

ஈரானுடான இராஜதந்திர முயற்சி தோல்வியடைந்தால் இராணுவம் பயன்படுத்தப்படும்!

Pagetamil

ஈரான்-அமெரிக்கா அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கும் அப்பாஸ் அரக்சி யார்?

Pagetamil

உக்ரைனில் கைப்பற்றிய பகுதிகளின் உரிமையை ரஷ்யாவிற்கு விட்டுக்கொடுப்பதே போர் நிறுத்தத்திற்கு சிறந்த வழி!

Pagetamil

வரிப் போர்: ஹாலிவுட் படங்களை குறி வைக்கும் சீனா!

Pagetamil

சீனப் பொருட்கள் மீது 125% வரி விதித்த ட்ரம்ப்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!