13 பேருக்கு கொரோனா தொற்று: கொத்மலை – பனன்கம்மன பகுதி தனிமைப்படுத்தப்பட்டது!

Date:

கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனன்கம்மன கிராம அலுவலகர் (473) காரியாலயத்திற்கு உட்பட்ட பகுதிகள் இன்று (06) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு அமையவே இவ்வாறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி பனன்கம்மன கிராம பகுதியில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த பகுதிக்குள் உட் பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமுலாகியுள்ள பயணத்தடை மீள் அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அங்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை இப்பகுதியில் 100ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இன்னும் சிலருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும் கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

–க.கிஷாந்தன்-

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் நாடளாவிய மின்வெட்டு! மின்சார விநியோகத்தை மீளமைக்கும் பணிகள் தீவிரம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (17) மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய...

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்