25.4 C
Jaffna
January 24, 2025
Pagetamil
ஆன்மிகம்

மன ரீதியாக பலவீனமான ராசிகள்!

சமூகத்தில் பலர் பலவிதமானவர்களாக குணங்களைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். மன ரீதியாக பலவீனமானவர்களாக, நிலையற்ற மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள். யார் ஒருவன் நிலையற்ற மன நிலை கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் சூழலைச் சமாளிப்பதில் கஷ்டப்படுவார்கள்.

ஜோதிடத்தில் நம் ஜாதகத்தை வைத்து அதில் அமைந்துள்ள கிரக நிலைகளை வைத்து நம் குண நலன்கள், நமக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

நம் வாழ்க்கை பல்வேறு சவால்களை தினமும் சந்தித்து வருகின்றோம். நம் வாழ்க்கை சிறப்பாக அமைய எந்த ஒரு மோசமான சூழலிலும் மன தைரியத்துடன் செயல்படுவது அவசியம். சிலர் மன ரீதியாக பாதிக்கப்படுவதோடு, நிலையற்ற மன நிலை கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் சூழலைச் சமாளிப்பதில் கஷ்டப்படுவார்கள்.

ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட குணம் உள்ளது. அந்த வகையில் இந்த ராசியினர் மன ரீதியாக பலவீனமானவர்களாக, நிலையற்ற மனநிலை உள்ள ராசிகள் யார் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

கடக ராசி

கடக ராசி சந்திரனால் ஆளப்படுகிறார். சந்திரன் மனோகாரகன் என அழைக்கப்படுபவராவார். அதனால் இந்த ராசியை சேர்ந்தவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மகிழ்ச்சியான சூழலாக இருந்தால் அதிக ஆனந்தமாகவும், சோகமான, மோசமான செய்தி என்றால் மிகுந்த மனச்சோர்வில், கண்ணீருடன் கவலையில் மூழ்குவர்.

இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை கணிக்கமுடியாதவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை விட இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் மிக ஆழமாக உணரக்கூடியவர்களாகவும், அதிக காயப்படுபவர்களாக இருப்பார்கள். இவர்களின் பலவீனமே இவர்களின் நிலையற்ற மன நிலை, உணர்வு ரீதியாக பலவீனமானவர்களாக இருப்பது தான்.

துலாம் ராசி

துலாம் ராசியினர் சுக்கிரனின் ஆதிக்கத்தைக் கொண்டது. இவர்கள் சமநிலையற்ற மன நிலை கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படி இருக்கும்போது, அவர்களின் உணர்வு நிலை அதிகமாகி மனதை பாதிப்பதாக இருக்கும்.

இவர்கள் சில உணர்ச்சிகரமான செய்தியை கேட்கும் போது இவர்களின் மனம் நிம்மதி இழந்து போகும். நிலையற்ற நிலையால் வருத்தத்தை அனுபவிப்பார்கள்.

விருச்சிகம் ராசி

தேள் அடையாளமாகக் கொண்ட செவ்வாய் ஆட்சி செய்யக்கூடிய ராசி விருச்சிக ராசி. இவர்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த பார்ப்பார்கள். இவர்கள் எந்த ஒரு விஷயங்களையும் மிகவும் ஆழமாக யோசிப்பார்கள், உணர்வார்கள்.

இவர்கள் தங்களின் அன்புக்குரியவர்கள் நேர்மையாக, மிகவும் அன்பாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். இவர்கள் தங்களின் அன்புக்குரியவரால் ஏமாற்றப்படுவதை உணர்ந்தாலோ, அல்லது தன்னை மதிக்கவில்லை என்ற நிலை இருந்தாலோ அவர்களை சாதாரண நிலைக்கு மீண்டும் கொண்டு வருவது சாத்தியமில்லை.

மீனம் ராசி

குருவை அதிபதியாக கொண்ட மீன ராசியினர் மீன்களைப் போல அதிக உணர் திறனைக் கொண்டவர்கள். ஒருவிஷயத்தை நினைத்து அதிகமாக கனவு காணும் மக்களாக இருப்பார்கள். இவர்கள் உணர்வு ரீதியாக ஒரு நிலையற்றவர்களாக இருப்பார்கள்.

மன சஞ்சலமான நேரத்தில் அவர்கள் விரும்பும் இசை கேட்பது அல்லது கலையில் ஆர்வத்துடன் ஈடுபடுவது விரைவாக மகிழ்ச்சியான மனநிலைக்குத் திரும்ப முடியும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மீனம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

கும்பம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

மகரம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

தனுசு ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

விருச்சிகம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

Leave a Comment