ஒவ்வொரு ராசிக்காரர்களும் வீடு மனை முதலான செல்வங்களைப் பெறுவதற்கு அந்தந்த தெய்வங்களை வணங்கவேண்டும் என்கிறார்கள். அப்படி வணங்கி வழிபட்டு பிரார்த்தனைகள் மேற்கொண்டு வந்தால், விரைவில் சொந்த வீடு யோகம் கிடைக்கப் பெறலாம்.
சொந்தவீடு என்பதுதான் பெரும்பாலான மக்களின் ஆசை, கனவு,, லட்சியம். குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து எப்படியாவது வீடு வாங்கிவிடவேண்டும் என்றும் இடம் வாங்கி வீடு கட்டி குடியேறிவிட வேண்டும் என்றும் உழைப்பவர்கள் இருக்கிறார்கள்.
எந்த ராசிக்காரராக இருந்தாலும் முருகப்பெருமானை வழிபட்டு வந்தால், வீடு மனை வாங்குகின்ற யோகம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம். செவ்வாய் பகவான் பூமி காரகன். செவ்வாய்க்கு அதிபதி முருகக் கடவுள். அதனால்தான், முருகப்பெருமானை வணங்கி வந்தால், வீடு பேறு தந்தருள்வார் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அதேசமயம், ஒவ்வொரு ராசிக்காரர்களும் வீடு மனை முதலான செல்வங்களைப் பெறுவதற்கு அந்தந்த தெய்வங்களை வணங்கவேண்டும் என்கிறார்கள். அப்படி வணங்கி வழிபட்டு பிரார்த்தனைகள் மேற்கொண்டு வந்தால், விரைவில் சொந்த வீடு யோகம் கிடைக்கப் பெறலாம்.
இனி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் வீடு அமைய வழிபடுவதற்கான தெய்வங்கள் :
மேஷ ராசி – அம்பாள்
ரிஷப ராசி – சிவபெருமான்
மிதுன ராசி – மகாவிஷ்ணு
கடகராசி – அம்பாள்
சிம்மராசி – முருகப் பெருமான்
கன்னி ராசி – சித்தர்கள் மற்றும் காவல் தெய்வங்கள்
துலா ராசி – விநாயகப் பெருமான்
விருச்சிக ராசி – பைரவர் மற்றும் காவல் தெய்வங்கள்
தனுசு ராசி – முருகப் பெருமான்
மகர ராசி – அம்பாள்
கும்ப ராசி – காவல் தெய்வங்கள் மற்றும் குலதெய்வம்
மீன ராசி – மகாவிஷ்ணு