28.1 C
Jaffna
December 7, 2021
மருத்துவம் லைவ் ஸ்டைல்

தினமும் ஒரு பல்லாவது பூண்டு சாப்பிட்டா இந்த நன்மைகள் கிடைக்கும்.

இந்த கட்டுரையில் பூண்டின் மருத்துவ குணங்கள் மற்றும் அதன் அனைத்து வித நன்மைகளை பற்றி விளக்கப்படுகிறது. குறிப்பாக, இதய அழுத்தம், நறுமணம், நோய் எதிர்ப்பு சக்தி, வயதாவதை தடுத்தல் போன்ற பணிகளை எவ்வாறு பூண்டு செய்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம்.

நிறைய பேர் பூண்டை விரும்புகிறார்கள். ஏனெனில் பூண்டினை உணவில் சேர்ப்பதன் மூலம் உணவிற்கும் ஒரு சுவையை சேர்க்க முடிவதுடன் நமது நல்வாழ்விற்கும் சிறந்தது! மேலும் இந்த கட்டுரையை படித்து, பூண்டு சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடலுக்கு கிடைக்கும் பலன்களை கண்டறியவும்.

​ஆரோக்கியமான பற்கள்:

வீக்கமடைந்த ஈறுகளுக்கு சிகிச்சையளிப்பதில் பூண்டு ஒரு நல்ல மருந்தாக செயல்படுகிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கூடுதலாக, இயற்கையாகவே பூண்டு ஆனது பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் தடுப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது உங்கள் வாயில் வாழும் பாக்டீரியாக்கள் மற்றும் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் உள்ளுறுப்புகளில் உள்ள வைரஸ் , பாக்டீரியாக்களினையும் அழிக்கிறது.

​உடற்பயிற்சிக்கு ஒத்துழைக்கும்:

உங்கள் உடற்திறனை மேம்படுத்த நீங்கள் கடினமாக உடற்பயிற்சி செய்கிறீர்களா? உங்கள் உணவில் அதிக பூண்டு சேர்த்துக் கொள்வதன் மூலம், உடற்பயிற்சியின் போது உங்கள் இதயத்தின் சுமையை குறைக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. பூண்டில் இருக்கும் ஒரு திரவத்தினால் நிகழ்வதாக அவர்கள் எடுத்துரைக்கிறார்கள்.

கூடுதலாக, இது பண்டைய காலங்களிலே அறியப்பட்ட உண்மை என்பதை அறிந்து கொள்ளலாம், பண்டைய கிரேக்கர்கள் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் மற்றும் கனமான உடல் வேலைகளில் ஈடுபடும் நபர்களுக்கு பூண்டினை பரிந்துரைப்பார்கள். இது கடின உழைப்பினை கொஞ்சம் இலகுவாக்க பயன்படும்.

​வயதாவதை எதிர்ப்பு பண்புகள்

பூண்டு ‘ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு’ எதிராக செயல்பட முடியும் என்பதற்கு ஆதாரம் இருப்பதாகத் தெரிகிறது, ‘ஆக்சிஜனேற்ற அழுத்தம்” என்பதை எளிமையாகச் சொன்னால், நம் உடல்கள் உணவு மற்றும் ஆக்ஸிஜனை ஆற்றலாக மாற்றுவதால் நாம் வயதானவர்களாக வளர்கிறோம். இருப்பினும், சில நேரங்களில் நம் உடல் இந்த செயல்முறையில் கொஞ்சம் வேகமெடுத்து செயல்படும். எனவே, விரைவில் நாம் வயதாவது போன்ற தோற்றம் உருவாகும். முகங்களில் சுருக்கம், முடி வெள்ளை ஆகுதல், அடிக்கடி நோய் தாக்குதல் போன்றவை ஏற்படும். அதுதான் ‘ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின்’ விளைவுகள்.

இந்த சந்தர்ப்பங்களில், பூண்டு உங்கள் உணவில் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் உடலில் உயிரணுக்கள் பாதிப்பதற்கு காரணமான ஆக்சிஜனேற்ற அழுத்தத்திற்கு எதிராக செயல்படும். எனவே, இரத்தத்தில் உள்ள உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரித்து உடலானது வயதாவதை குறைக்கிறது. இந்த பூண்டானது பொதுவாக ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த வழியில், பூண்டு வயதான உடல் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது!

​பூண்டினால் நறுமண வாசனை:

இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், இது உண்மை. நிச்சயமாக, பூண்டுக்கு என்று ஒரு வாசனை இருக்கும். ஆனால், உங்கள் உடல் வாசனையும் கூட நாம் சாப்பிடும் காய்கறிகளின் காரணமாக மாறுபடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆனால், உங்கள் உடல் வாசனையில் பூண்டின் தாக்கம் இருந்தால் அது நல்ல நறுமணத்தினை தருகிறது என்பதை 2016 ஆம் ஆண்டின் ஆராய்ச்சி காட்டுகிறது. பலரை வாசனை சோதனையில் ஈடுபடுத்தியதில் பூண்டு சாப்பிட்டவர்கள் தங்களது உடலில் இருக்கும் நறுமணமானது ‘அதிக கவர்ச்சியானது’ என்று விவரித்தனர்.

இதற்கு பூண்டின் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் காரணமாக இருக்கலாம். வியர்வையின் மோசமான வாசனையை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் உங்கள் உடலில் உள்ள பூண்டால் குறைகின்றன என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

நோய் எதிர்ப்பு சக்திக்கு பூண்டு உதவும்:

பூண்டு நம் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும் என்பது நமது தாத்தா/ பாட்டி மற்றும் அவர்களின் தாத்தா/ பாட்டிக்கும் கூட தெரிந்திருக்கும்.ஏன் அதற்கு முன்பு உள்ள தாத்தா/பாட்டிக்கு கூட தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இந்த பூண்டானது பல நூற்றாண்டுகளாக பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகளுக்கு எதிராக செயல்படும் பண்புகளைக் கொண்டுள்ளது.

உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தினை பலப்படுத்துவதற்கு நீங்கள் பூண்டை பச்சையாக சாப்பிட வேண்டும். பூண்டை வெட்டும்போது அல்லது நசுக்கும்போது, அதிலிருந்து ‘அல்லிசின்’ வெளியிடப்படுகிறது. இந்த வேதி பொருளானது உங்கள் ஆரோக்கியத்திற்கு நிறைய நன்மைகளைக் கொண்டுள்ளது, ஆனால், பூண்டை சமையலில் பயன்படுத்தும் போது, அல்லிசினின் பெரும்பகுதியை நீங்கள் இழப்பீர்கள். எனவே, உரிய சத்துகள் கிடைக்காமல் போய்விட வாய்ப்புகள் இருக்கின்றன.

​உயர் இரத்த அழுத்தத்திற்கு எதிரான பூண்டு:

இந்த கால கட்டத்தில், உயர் இரத்த அழுத்தத்தின் ஆபத்துகளை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். இதற்கு முக்கிய காரணமாக கொலஸ்ட்ரால் வகிக்கும் பங்கைப் பற்றி நாம் அறிந்து வைத்திருக்கிறோம். அதனால்தான் இப்போதெல்லாம், உங்கள் கொழுப்பைக் குறைப்பதாகக் கூறும் தயாரிப்புகளைப் பற்றி நீங்கள் அடிக்கடி கேள்விப்படுவீர்கள்.

பூண்டு கூட அந்த கொழுப்பை குறைக்கும் பொருட்களில் ஒன்றாகும். தினசரி பூண்டு உட்கொள்வது உங்கள் கொழுப்பைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், நீங்கள் ஏதேனும் இருதய நோய் அல்லது உங்கள் உடலின் கொலஸ்ட்ரால் அளவைக் கையாளுகிறீர்கள் என்றால், நீங்கள் எப்போதும் மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெற வேண்டும். ஒருவேளை, பூண்டு விளைவுகளை ஏற்படுத்துவது உண்மைதான். ஆனால், இது ஒரு சிகிச்சை அல்ல.v

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பது உண்மைதான்!

divya divya

தாய்ப்பால் கொடுத்தாலே எடை குறைந்து விடுமா?

divya divya

கண்ணாடி அணிந்தாலும் அழகாக தெரிய வேண்டுமா!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!