ஒடிசா மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்திருந்தார். மேலும், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
இந்நிலையில், இன்று முதல் மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஊரடங்கானது இன்று முதல் வருகிற 19ம் தேதி வரை 2 வாரங்களுக்கு அமலில் இருக்கும் என்றும் கடும் கட்டுப்பாடுகளுடன் வார நாட்களில் ஒருசில போக்குவரத்துக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகள் திறக்க மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.




