இறந்த நடிகரின் போட்டோவை தொட்டுப் பார்த்து சிரிக்கும் மகன்: ரசிகர்கள் கண்ணீர்!

Date:

இறந்து போன சிரஞ்சிவீயின் புகைப்படத்தை தொட்டுப் பார்த்து சிரிக்கும் அவரின் மகனின் வீடியோவை பார்த்த ரசிகர்களால் அழாமல் இருக்க முடியவில்லை. சிரஞ்சீவியின் மனைவி மேக்னா அநத் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஆக்ஷன் கிங் அர்ஜுன் சகோதரியின் மகனான கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். 36 வயதில் சிரஞ்சீவி இறந்த செய்தி அறிந்த ரசிகர்களும், திரையுலகினரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

சிரஞ்சீவி இறந்தபோது அவரின் காதல் மனைவியான நடிகைமேக்னா ராஜ் 5 மாதம் கர்ப்பமாக இருந்தார். தான் தந்தையாகப் போவதாக ரசிகர்களிடம் அறிவிக்க காத்திருந்த சிரஞ்சீவி இறந்துவிட்டார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் மேக்னா. சிரஞ்சீவியே மகன் வடிவில் வந்துவிட்டதாக குடும்பத்தார் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். சிரஞ்சீவிக்கும், மேக்னாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்த தேதி அக்டோபர் 22. அதனால் தங்களுக்கு ஸ்பெஷலான தேதியில் மகன் பிறந்ததாக மேக்னா தெரிவித்தார்.

தற்போதைக்கு ஜூனியர் சிரு என்று அழைக்கப்படும் அந்த குழந்தையின் புகைப்படங்கள், வீடியோக்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் மேக்னா. அதை பார்த்துப் பார்த்து சந்தோஷப்படுகிறார்கள் சிரஞ்சீவியின் ரசிகர்கள்.

இந்நிலையில் ஜூனியர் சிரு தன் அப்பாவின் புகைப்படத்தை தொட்டுப் பார்த்து சிரித்தபோது எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார் மேக்னா ராஜ். அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் சந்தோஷப்பட்டாலும், கண் கலங்கியுள்ளனர்.

இவ்வளவு அழகான குழந்தையை பார்க்க சிரஞ்சீவி அண்ணாவுக்கு கொடுத்து வைக்கவில்லையே. அப்பாவை பார்க்கும் பாக்கியம் ஜூனியருக்கு கிடைக்காமல் போய்விட்டது என வருத்தப்படுகிறார்கள் ரசிகர்கள்.

மேக்னா ராஜ் இன்று தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலகினரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேக்னாவும், சிரஞ்சீவியும் 10 ஆண்டுகளாக காதலித்தனர். அதன் பிறகு கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.

2018ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். சிருவின் மரணத்திற்கு பிறகு மேக்னா ராஜ் தைரியமாக இருப்பதை பார்த்து தான் நாங்களும் தைரியமாக இருக்கிறோம் என்று அவரின் அப்பா சுந்தர் ராஜ் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

spot_imgspot_img

More like this
Related

மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம்

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம்...

பாடசாலை மாணவர்களையும் சென்றடைந்த போதைப்பொருள் – இலங்கையின் எதிர்காலத்திற்கு பெரும் ஆபத்து!

போதைப்பொருள் பாவனை நாட்டை சீரழித்து வரும் நிலையில், அது பாடசாலை மாணவர்களையும்...

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்