26.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இந்தியா சினிமா

பெரியப்பா வழியில் நின்று கடுமையான சோதனைகளை கடந்தவர் அண்ணன் ஸ்டாலின்: பிரபு வாழ்த்து!

தமிழக முதல்வராக பொறுப்பேற்கவிருக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு இளைய திலகம் பிரபு வாழ்த்து தெரிவித்துள்ளார். திரையுலகினர் பலரும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 6ம் தேதி நடைபெற்றது. அப்பொழுது பதிவான வாக்குகள் கடந்த 2ம் தேதி எண்ணப்பட்டது. அதில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல் முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்கவிருக்கிறார்.

இந்நிலையில் ஸ்டாலினுக்கும், சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற அவரின் மகன் உதயநிதிக்கும் திரையுலகை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது இளைய திலகம் பிரபு ஸ்டாலினை வாழ்த்தியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது,

அருமை பெரியப்பா டாக்டர் கலைஞர் வழியில் நின்று கடுமையான சோதனைகளை கடந்தவர் அண்ணன் தளபதி ஸ்டாலின் அவர்கள். அப்பாவின் அடிச்சுவற்றில் அயராது மக்கள் பணியாற்றி நல்லரசு நடத்திட வாழ்த்துகிறேன். முதன் முதலாக முதல்வர் பதவியில் அமர்கின்ற அன்பு சகோதரருக்கு நடிகர் திலகம் குடும்பத்தின் சார்பில் வரவேற்பும் வாழ்த்துகளும். அன்புச் சகோதரன் பிரபு என தெரிவித்துள்ளார்.

தன்னை வாழ்த்தும் திரையுலகினரில் சிலருக்கு ஸ்டாலின் பதிலும் அளித்துள்ளார். அதில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஸ்டாலின் பதில் அளித்தது பலரையும் கவர்ந்தது.

சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! என்று ட்வீட் செய்தார் ரஹ்மான். அதை பார்த்த ஸ்டாலினோ, இசைப்புயல் – ஆஸ்கர் விருதாளரான தங்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும் என்றார்.

ஸ்டாலினின் பதிலை பார்த்த ரஹ்மானோ, கோவிட் பெருந்தொற்றால் அல்லல்படும் தமிழர்களுக்கு இது, தேன் போல இனித்திடும் வாக்குறுதி. இந்த வாக்குறுதி பலித்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினை வாழ்த்துவதுடன் கொரோனா வைரஸ் பிரச்சனையால் முடங்கிப் போயிருக்கும் தமிழ் திரையுலகிற்கு உதவி செய்யுமாறும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்

Pagetamil

‘பொன்வேலின் முதல் ஓட்டு விஜய்க்கே!’ – மொத்தமாக தவெக-வில் கலந்த மாரி செல்வராஜின் ‘வாழை’ கிராமம்

Pagetamil

அசைவ உணவை கைவிடும்படி சைக்கோ தனமாக பலவந்தப்படுத்திய காதலன்: 25 வயதான விமானி விபரீத முடிவு!

Pagetamil

Leave a Comment