கொடிகாமம் சந்தை மற்றும் நகர வர்த்தகர்கள் 21 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
நேற்று கொடிகாமம் சந்தை வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பணியாற்றுபவர்கள் 156 பேரிடம் நேற்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இநத மாதிரிகள் யாழ் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் சோதனை செய்யப்பட்டது.
இதில் 21 பேருக்கு தொற்று உறுதியானது.
இத்துடன், சாவகச்சேரி சந்தை மற்றும் வர்த்தக நிலையங்களில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பில் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சுதோகுமார் தெரவிக்கையில், சந்தை வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பணியாற்றுபவர்களே இதுவரை பரிசோதிக்கப்பட்டு தொற்றாளர்கள் உறுதி செய்யப்படடுள்ளனர். சந்தை, வர்த்தக நிலையங்களிற்கு பெருமளவான மக்கள் வந்து சென்றுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதெனில் அத்தியாவசிய தேவைகளிற்கு மட்டுமே நடமாட வேண்டும். மக்கள் இயன்றவரை வீடுகளில் இருப்பதே தொற்றை கட்டுப்படுத்த ஒரே வழி.
தென்மராட்சி பகுதிகளில் யாராவது தொற்று அறிகுறிகளுடன் தென்பட்டால், 0212270014 என்ற இலக்கத்தில் சாவகச்சேரி சுகாதார வைத்தய அதிகாரி பிரிவிற்கு தகவலளிக்கலாம்.. அல்லது சாவகச்சேரி வைத்தியசாலைக்கு உரிய முறையில் சென்று பரிசோதனை மேற்கொள்ளலாம் என்றார்.