நுவரெலியா மாவட்டத்தில் நேற்று 104 பேருக்கு கொரோனா தொற்று!

Date:

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (4) மாத்திரம் 104 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கொரோனா தடுப்பு செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அட்டன் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 23 பேருக்கும், வலப்பனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 23 பேருக்கும், நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 23 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

அத்துடன், அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேரும், பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐவரும், டிக்கோயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐவரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கினிகத்தேனை, கந்தபளை, நோர்வூட், லிந்துலை மற்றும் ராகலை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த ஒக்டோபர் 24 ஆம் திகதி முதல் நேற்று வரை நுவரெலியா மாவட்டத்தில் ஆயிரத்து 684 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

க.கிஷாந்தன்-

spot_imgspot_img

More like this
Related

பலே திருடனை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிசார்

ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான மோசடி மற்றும் திருட்டு...

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை...

முல்லைத்தீவு இ.போ.ச சாலைக்குள் நடந்த அகோர சம்பவம்!

இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவுச்சாலை உதவி முகாமையாளரான பிரதீஸ்குமார் என்பவர், கடமை நேரத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்