இலங்கை கிரிக்கெட் வீரர் திசர பெரேரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
32 வயதான பெரேரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் தனது முடிவை இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒருநாள் அணியில் இருந்து பெரேரா உள்ளிட்ட பல மூத்த கிரிக்கெட் வீரர்களை நீக்குவது குறித்து இலங்கையின் புதிய தேர்வாளர்கள் பரிசீலித்து வருவதாக சமீபத்தில் தெரிவித்ததை தொடர்ந்து, பெரேரா இந்த முடிவிற்கு வந்துள்ளார்.
இதன் விளைவாக, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற பெரேர முடிவு செய்துள்ளார்.
வரவிருக்கும் பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து ஒருநாள் சுற்றுப்பயணங்களுக்கான இலங்கை ஒருநாள் அணியில் பல மூத்த கிரிக்கெட் வீரர்களை இணைப்பதில்லையென இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
மூத்த வீரர்களான திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மத்யூஸ், தினேஷ் சந்திமல், சுரங்க லக்மல் மற்றும் திசர பெரேரா ஆகியோரை வரவிருக்கும் வரையறுக்கப்பட்ட ஓவர் சுற்றுப்பயணங்களுக்கு தேர்வாளர்கள் பரிசீலிக்க வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியிருந்தது.
ஒருநாள் அணிக்கான தலைவராக குசல் ஜனித் பெரோராவும், துணைத்தலைவராக குசல் மெண்டிசும் நியமிக்கப்படுவார்கள் என தெரிகிறது.