வடமாகாணத்தில் இன்று 14 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இன்று 404 பேருக்கு யாழ் பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாழ்ப்பாணத்தில் 9 பேரும், முல்லைத்தீவில் 2 பேரும், கிளிநொச்சி, மன்னார், வவுனியா பகுதிகளை சேர்ந்த ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்டனர்.
வவுனியா பாவற்குளம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.
மன்னார் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் அடையாளம் காணப்பட்டார்.
கிளிநொச்சி வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.
முல்லைத்தீவு மாங்குளம் வைத்தியசாலை உத்தியோகத்தரும், கண்டிக்கு சென்று வந்த ஆசிரியர் ஒருவர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ் மாவட்டத்தில், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொடிகாமம் சந்தையில் 2 பேரும், நிறுவனமொன்றின் காட்சிக்கூடத்தில் 2 பேரும், சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுயதனிமையில் இருந்த இருவரும், யாழ்ப்பாண பல்கலைகழக விஞ்ஞான பீட மாணவனும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எழுமாற்றாக நடத்தப்பட்ட சோதனையில் தனியார் நிதி நிறுவன ஊழியர் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.