இந்த வாரம் நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் இன்று சட்டத்தரணிகள் குவிந்திருந்தனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த வாரத்தில் பிணை, நீதிபதி அவசரமென கருதும் வழக்குகள் தவிர்ந்த வழக்குகள் எடுத்துக் கொள்ளப்படாது, அவசரமான வழக்குகள் காணொளி ஊடாக எடுத்துக் கொள்ளப்படும் என நீதிச்சேவைகள் ஆணைக்குழுவும், சட்டத்தரணிகள் சங்கமும் நேற்றே அறிவித்திருந்தன.
எனினும், இன்று யாழ்ப்பாணத்தின் ஓரிரு சட்டத்தரணிகள் தவிர்ந்த ஏனைய சட்டத்தரணிகள் அனைவரும் நீதிமன்றத்தில் குவிந்திருந்தனர்.
வாடிக்கையாளர்கள் சிலரும் வந்திருந்தனர். எனினும், சட்டத்தரணிகள் அதகளவில் குவிந்திருந்தனர்.
இன்றைய வழக்குகளின் ஒத்திவைக்கப்பட்ட விபரம் நீதிமன்றத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்து.
சட்டத்தரணிகளின் இந்த நடவடிக்கை தொடர்பில் சட்டத்தரணிகள் வட்டரங்களிற்குள்ளேயே அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.




