பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மாற்று சிந்தனைக் கொண்ட இளைஞர்கள், ஊடகவியலாளர்கள், பெரியாரியக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்ள், ஆசிரியர்கள் என பலரும் சி.ஐ.டியினர் என தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளும் சிலரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
தங்களது வீடுகளுக்கும், தொழில் செய்யும் நிறுவனங்களுக்கும் மோட்டார் சைக்களில்கள் உள்ளிட்ட வாகனங்களில் வருவோர், தங்களை சி.ஐ.டி அதிகாரிகளென அறிமுகப்படுத்திகொண்டு விசாரணைக்கு உட்படுத்துகின்றனர் என்றும் விசாரணைகளுக்கு முகங்கொடுத்தவர்கள் தெரிவித்தனர்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் இயங்கும் சுயாதீனமானக் குழுக்கள், அமைப்புக்களின் தகவல்கள் திரட்டப்படுவதாகக் கூறியே தங்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் விசாரணைக்கு முகங்கொடுத்தோர் தெரிவித்தனர்.