வவுனியாவின் இருவேறு பகுதிகளில் பொலிசார் என தெரிவித்து 30பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளது .
இன்றையதினம், வவுனியாநகர் மற்றும் தேக்கவத்தை பகுதிகளில் உள்ள வீடுகளிற்கு சென்ற இனம் தெரியாத நபர்கள், தங்களை பொலிசார் என கூறியுள்ளனர்.
பின்னர் வீட்டில் சோதனை செய்வது போல பாசாங்கு செய்துவிட்டு இருவீடுகளில் இருந்தும் 30 பவுண் தங்க ஆபரணங்களை களவாடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்ற நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1