அனுஷ்காவுக்கும், துபாயை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் என்று தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இதை அனுஷ்கா தரப்பு இதுவரை உறுதி செய்யவில்லை.
ஈசியான கேள்விகளுக்கு பதில் சொல்லி மிகப்பெரிய பரிசுகளை வெல்லலாம்
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் அனுஷ்காவுக்கு 39 வயதாகிறது. அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஆசைப்படுகிறார்கள். திருமணம் தொடர்பாக அனுஷ்காவும் தன் பெற்றோருடன் கோவில் கோவிலாக சென்று கொண்டிருக்கிறார். ஆனால் இதுவரை நல்ல பையன் அமையவில்லையாம்.
இந்நிலையில் அனுஷ்காவுக்கும், துபாயை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. அனுஷ்காவின் கெரியர் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இதையடுத்து தான் உடனே திருமணம் செய்து கொள்ள நான் ரெடி, மாப்பிள்ளையை சீக்கிரமாக பாருங்கள் என்று அனுஷ்கா கூறினாராம்.
அவரே சரி என்று சொன்ன பிறகு சும்மா இருந்தால் நன்றாக இருக்காது என்று துபாய் மாப்பிள்ளையை பார்த்திருக்கிறார்களாம். இது பெரியவர்களாக பார்த்து நடத்தும் திருமணமாம்.
இருப்பினும் இந்த தகவலை அனுஷ்கா தரப்பில் இருந்து உறுதி செய்யவில்லை. அவர் உறுதி செய்யும்வரை நம்பவும் முடியாது. அனுஷ்காவுக்கும், தொழில் அதிபர் ஒருவருக்கும் திருமணமாம் என்று செய்தி வெளியாகியிருப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல.
அது ஏன் மக்கள் தன் திருமணத்தில் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்று கூறி அனுஷ்கா கடுப்பான சம்பவமும் நடந்திருக்கிறது. எனக்கு திருமணம் நடக்கும்போது நானே அறிவிப்பேன் என்றார் அனுஷ்கா.
முன்னதாக ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் சேர்ந்து நடித்தபோது பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இடையே காதல் ஏற்பட்டதாக பேச்சு கிளம்பியது. அந்த காதல் பேச்சை அனுஷ்கா மறுக்கவில்லை. பிரபாஸ் தான் மறுத்தார்.
அனுஷ்காவை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும், அவர் எங்கள் குடும்ப நண்பரே தவிர காதலி இல்லை என்றார் பிரபாஸ். ஆனால் அவர் அளித்த விளக்கத்தை ரசிகர்கள் ஏற்கவில்லை. அதன் பிறகு விளக்கம் கொடுப்பதை நிறுத்திவிட்டார் பிரபாஸ்.
இதற்கிடையே அனுஷ்காவுக்கும், பிரபல இயக்குநர் பிரகாஷ் கோவலமுடிக்கும் திருமணம் என்று கூட தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.