இந்த மாதத்தில் பொதுமக்களின் நடத்தையே ஒட்சிசன் தேவையை தீர்மானிக்கும்!

Date:

கொரோனா வைரஸின் விரைவான பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அடுத்த நான்கு வாரங்கள் இலங்கைக்கு தீர்க்கமானதாக இருக்கும் என்று ஆரம்ப சுகாதார, தொற்றுநோய் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்ள்ளே தெரிவித்துள்ளார்.

மே மாதம் முழுவதும் மக்கள் சுகாதார ஆலோசனையை கடுமையான முறையில் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுக்க சுகாதார பிரிவுகளுக்கு மக்கள் ஆதரவு தேவை என்று அவர் குறிப்பிட்டார்.

போதுமான தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் மற்றும் போதுமான ஒட்சிசன் உள்ளதா என்பது குறித்து பலர் கவலை கொண்டுள்ள நிலையில், ஒட்சிசன் கிடைப்பது இந்த மாதத்தில் மக்களின் நடத்தைiயப் பொறுத்தது என்றார்.

பொதுமக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால் COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கக்கூடும் என்று அவர் வலியுறுத்தினார்.

எனவே அடுத்த நான்கு வாரங்களில் பொறுப்புடன் செயல்படுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் எழுத்தாளரின் புத்தங்களை விடுவிக்குமாறு சுங்கத்துறைக்கு பரிந்துரைத்தது மனித உரிமைகள் ஆணைக்குழு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தமிழ் எழுத்தாளர் பி. பிரதீபனின் இரண்டு புத்தகங்களை...

ஆசிரியை மதிவதனிக்கு நீதி கோரி வவுணதீவில் போராட்டம்

மட்டக்களப்பு திமிலைதீவு கனரக வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த ஆசிரியை மதிவதனி...

ஹிஜாப் மீதாத தடையால் கல்முனை வைத்தியசாலை முஸ்லிம் ஊழியர்களின் உரிமை மீறப்பட்டுள்ளது: மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்ப்பு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமையின் போது தலைக்கவசம் (ஹிஜாப்) மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்