ரிஷாத்தை விடுவிக்க கோரி வவுனியாவில் போராட்டம்!

Date:

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் அவரது சகோதரரை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் ஆர்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா புதியசாளம்பைக்குளம் பள்ளிவாசலுக்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்-

ரிஷாத் பதியூதீனை அதிகாலையில் சென்று கைதுசெய்யப்பட்டதையிட்டு வேதனையடைகின்றோம். அவரது கைதுக்கு வன்மையாக கண்டனங்களை தெரிவிக்கின்றோம். அரசாங்கம் தன்னுடைய தோல்வியை மறைப்பதற்காக இவ்வாறான கைதுகளை முன்னெடுத்துவருகின்றது.

அவர் அமைச்சராகவிருந்து பல்வேறு அபிவிருத்திகளை வன்னி மாவட்டத்திலே முன்னெடுத்தவர். எனவே அவர் விடுதலை செய்யப்பட வேண்டும். நாட்டின் ஆட்சியாளர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாரைத் திருப்திப்படுத்த இந்த கைது, சர்வதேச உறவுகளே அவரின் விடுதலைக்காய் குரல்கொடு, சிறுபான்மை தலைமைகளை விடுதலை செய் போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டு ஆரையம்பதியில் மட்டக்களப்பு ரவுடி வாள் வெட்டு குழுவைச் சேர்ந்த இருவர் வாள்களுடன் கைது

மட்டு ஆரையம்பதி வம்மிக்கேணி  மாரியம்மன் கோவில் முன்றலில்  கடந்த மாதம் மட்டக்களப்பு...

பைத்தியக்கார ஈரானை கடுமையாக தாக்குவோம்!

ஹோர்முஸ் ஜலசந்தியில் தெஹ்ரான் தொடர்ந்து கப்பல்களைத் தாக்கினால், ஈரான் மீதான அமெரிக்காவின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்