24.9 C
Jaffna
December 16, 2024
Pagetamil
ஆன்மிகம்

மீன், பசு, யானை போன்ற விலங்குகளுக்கு உணவளித்தால் உங்களின் பிரச்னை தீரும் தெரியுமா?

பொதுவாக தானங்களில் எல்லாம் மிகச்சிறந்ததாக அன்னதானம் கூறப்படுகிறது. அதிலும் பல்வேறு விலங்குகளுக்கு உணவளிப்பதன் மூலம் நம்முடைய பாவங்களும், பிரச்சினைகளும் நீங்கி நிம்மதி ஏற்படும். சக மனிதனுக்கு உணவளிப்பதால் சமூகம் உயரும், இருப்பினும் நம்மை சுற்றியுள்ள உயிரினங்களுக்கு உணவளிப்பதன் மூலம் அந்த விலங்கினம் பயனடைவதோடு இயற்கையும் செழிக்கும்.

​நாய்களுக்கு உணவளிப்பதன் முக்கியத்துவம்

ஆன்மிகத்தில் பைரவருக்கு நாய் வாகனமாக உள்ளது. ஜோதிடத்தின் படி நாய் கேது பகவானுடன் தொடர்புடைய விலங்கு. நாய்க்கு உணவளிப்பதன் மூலம் நம் வாழ்வில் இருக்கும் பிரச்சினைகள், தடைகள் நீங்கி நன்மை ஏற்படும். கேது பகவானால் ஏற்படக்கூடிய தீங்கு விளைவிக்கும் விளைவுகள் நீங்கும். வீட்டில் ஒரு நாயை வளர்ப்பது எதிர்மறை ஆற்றல்கள் நம்மை நெருங்குவது தவிர்க்கலாம்.

​மீன்களுக்கு உணவளிப்பதன் நன்மைகள்

ஆன்மிக புராண நம்பிக்கைகளின்படி பூமியைக் காக்க மகா விஷ்ணு ஒரு மீன் வடிவில் அவதரித்தார். மச்ச அவதாரமாக கொண்டாடப்படுகிறது. மீன்களுக்குத் தினமும் காலை நேரத்தில் உணவு அளிப்பதால் உங்கள் ஜாதகத்தில் இருக்கும் மோசமான கிரக அமைப்பால் ஏற்படும் மோசமான பலன்கள் நீங்கும்.வீட்டில் மீன்கள் வளர்ப்பதால் நம் மன அழுத்தம் குறைகிறது. அதோடு வீட்டில் நேர்மறையான ஆற்றல் பெற உதவுகிறது.

​பூனைக்கு உணவளிப்பதன் முக்கியத்துவம்

ஜோதிடத்தில் பூனைகள் ராகுவுடன் சம்பந்தமான விலங்கு என கூறப்படுகிறது. சிலர் ராகு கிரக அமைப்பின் காரணமாக சில மோசமான பாதிப்புகளை அடைந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் பூஜைகளுக்கு உரிய உணவை அளிப்பதன் மூலம் நற்பலனைப் பெற்றிடலாம்.சிலர் பூனைகளுக்கு தொந்தரவு தருதல், தீங்கு ஏற்படுத்துதல் போன்றவை செய்வதால் பாவம் வந்து சேரலாம். அவர்கள் பூஜைக்கு உகந்த உணவை அளித்து நன்மை பெறலாம்.

​பசுவுக்கு உணவளிப்பதன் முக்கியத்துவம்

பசு லட்சுமி தேவியின் தங்குமிடமாகவும், மாடு இந்து சமயத்தின் தாயாகவும் கருதப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பசுவுக்கு தீவனம், கீரை வழங்குவதன் மூலம், தாய் லட்சுமி தேவியின் அருளைப் பெற்றிடலாம்.

அதுமட்டுமல்லாமல் பசு மாடு குரு பகவானுக்கு தொடர்புடையதாக கருதப்படுகிறது. இதனால் குரு பகவானின் நல்லருள் பெற்றிடலாம். சிவந்த நிறம் கொண்ட பசுமாட்டுக்கு பசுந்தீவனம் உணவளிப்பதன் மூலம் செவ்வாய் பகவானின் அருளும், கருப்பு நிற பசுவுக்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவானின் நல்லருளைப் பெற்றிடலாம்.

​யானைகளுக்கு உணவளிப்பதன் முக்கியத்துவம்

யானை லட்சுமி தேவியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. மேலும் வேதங்களின்படி, யானைக்கு உணவளிப்பதும் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. யானை பிரிஹஸ்பதியுடன் (குரு) தொடர்புடையது என்றும் நம்பப்படுகிறது.

ஒருவரின் வாழ்வில் பணப்பிரச்னை அதிகமாக இருக்கிறது. ஏழ்மை துரத்துகிறது என்றால் அவர்கள் முடியும் போதெல்லாம் யானைக்கு உணவளிப்பது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. குறைந்த பட்சம் ஒரு சீப்பு வாழைப்பழமாவது யானைக்கு வழங்குவதால் மகாலட்சுமியின் அருளைப் பெற்றிடலாம்.

​குரங்குகளுக்கு உணவளிப்பதன் முக்கியத்துவம்

புராணங்களின் படி குரங்கு அனுமனாகவும், சிவபெருமானின் அவதாரமாக அனுமனைப் பார்க்கப்படுகிறது. குரங்கு இயற்கையாகவே மிகவும் சிக்கலானவராகக் கருதப்படுகிறது. குரன்கு செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடையதாகப் பார்க்கப்படுகிறது.

குரங்குகளுக்கு வாழைப்பழம் மிகவும் விருப்பமான உணவு. வாழைப்பழத்தை செவ்வாய்க் கிழமைகளில் குரங்குகளுக்குக் கொடுப்பதன் மூலம் அனுமனின் அருளும், செவ்வாயின் அருளையும் பெற்றிடலாம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நல்லூர் கந்தன் கொடியேற்றம்!

Pagetamil

நல்லூர் கந்தனுக்கு கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு

Pagetamil

நல்லூர் திருவிழா: காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

Pagetamil

நயினை நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழா

Pagetamil

மேஷம் முதல் மீனம் வரை: தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 – குரோதி வருடம் எப்படி?

Pagetamil

Leave a Comment