கன்னியாகுமரி : குளச்சல் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் குமரி.பா.ரமேசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிட்சைக்காக பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தல் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்பவர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தேர்தல் ஆணையம் பல கட்டுபாடுகளை விதித்துள்ளது.
அதன்படி வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் அதிகாரிகள், அரசியல் கட்சி முகவர்கள், காவலர்கள், செய்தியாளர்கள் கண்டிப்பாக 48-மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் நெகட்டிவ் சான்றிதழ் ளுடன் வருபவர்களுக்கு மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களுக்கு கழிந்த இரண்டு நாட்களாக பத்மநாபபுரம் அரசு தலமை மருத்துவமனையில் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இன்று முடிவுகள் வந்த நிலையில் குளச்சல் சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளராக போட்டியிட்ட குமரி.பா.ரமேஷ்க்கும் அவரது கட்சியை சேர்ந்த இரண்டு முகவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி சிகிச்சைக்காக பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.