ஒரு பெண் தனது பற்கள் இழப்பிற்கு, மைமோஸாக்கள் அதிகம் சாப்பிட்டதே காரணம் என தெரிவிக்கும் வீடியோ, நெட்டிசன்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாம் மகிழ்ச்சியாக இருந்தாலோ, நண்பர்கள், உறவினர்கள் உடன் சேர்ந்து இருந்தாலோ, மதுபானங்களை குடிப்பது வழக்கமாக கொண்டு உள்ளோம். அதிகமாக மது குடித்தால், அது நமது உயிருக்கு கேடாக முடியும் என்று பலர் சொல்ல கேட்டு இருக்கிறோம். ஆனால், அந்த அதிக அளவு எது என்று கேட்டால் நமக்கு சொல்ல தெரியாது.
இதற்கு, இந்த டிக்டாக் வீடியோ, தகுந்த பதிலை அளிக்கும் என்று நம்புகிறோம். அதிகமாக மைமோஸாக்களை சாப்பிட்ட பெண்ணுக்கு பற்கள் பறிபோன நிகழ்வையே, இந்த வீடியோ எடுத்துரைக்கிறது.
அந்த டிக்டாக் வீடியோவில், முதலில் தோன்றும் இளம்பெண் அழகாக சிரிக்கிறார். அந்த வீடியோவின் இறுதியில், அந்த பெண்ணின் முன்வரிசைப் பற்கள் காணாமல் போய் இருக்கிறது. இந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று சொன்னால் அது மிகையல்ல.
OH MY GOD??????????😭😭😭😭😭 pic.twitter.com/vq4UUuG66i
— 👁👅👁 (@fernvndooo) April 6, 2021
அந்த வீடியோவின் துவக்கத்தில், நான் இதுவரை 4 மைமோஸாக்களை சாப்பிட்டு இருப்பதாக சொல்லி சிரிக்கிறார் அந்த இளம்பெண். அதற்கு அடுத்தபடியாக மது கோப்பையை தாங்கியவாறு ஒரு இளைஞன் தோன்றுகிறான். இதுபோன்று, அந்த வீடியோவில் பலர் தோன்றுகின்றனர். 38 வினாடிகள் காலஅளவிலான இந்த வீடியோவில், சில வினாடிகளுக்கு பிறகு, தான் 7 மைமோஸாக்களை சாப்பிட்டதால், தன் முன் வரிசை பற்களை இழந்துவிட்டதாக அந்த பெண் கூறுகிறாள். தன் பற்கள் இழந்த வாய்ப்பகுதியையும் அவர் காட்டுகிறார்.
ஓ மை காட் (அடக் கடவுளே) என்று தலைப்பு இடப்பட்டுள்ள இந்த டிக்டாக் வீடியோ, இதுவரை 4 மில்லியனுக்கும் மேற்பட்ட முறை பார்வை இடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான கருத்துக்கள் இந்த வீடியோவிற்கு கிடைத்துள்ளன.