கண்டி, பல்லேகல மைதானத்தில் நடந்துவரும் 2வது டெஸ்டின் 4ஆம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மையால் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது. இன்றைய ஆட்டநேர முடிவில் பங்களாதேஷ் அணி 177/5 என்ற நெருக்கடியான நிலைமையில் உள்ளது.
இலங்கை நிர்ணயித்த 437 என்ற வெற்றி இலக்கை எட்ட நாளைய ஐந்தாம் நாளில், மீதமுள்ள 5 விக்கெட்டுக்களுடன் இன்னும் 260 ஓட்டங்களை பெற்றால் இந்த தொடரை பங்களாதேஷ் கைப்பற்றும்.
மாறாக, பங்களாதேஷின் மத்திய, பின்வரிசை வீரர்களை வீழ்த்தினால் இலங்கை ஆச்சரியமான வெற்றியொன்றை பெறும்.
முன்னதாக, இன்று இலங்கை தனது 2வது இன்னிங்ஸை 9/194 என நிறுத்திக் கொண்டது. திமுத் கருணாரட்ண 66, தனஞ்ஜய டி சில்வா 41 ஓட்டங்களை பெற்றனர்.
தைஜூல் இஸ்லாம் 72 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
437 என்ற பெரிய இலங்கை விரட்டிய பங்களாதேஷ், தமிம் இக்பால் 24, சைப் ஹசன் 34, நஜிமுல் ஹொசைன் 26, மௌனிமுல் ஹக் 32, முஸ்பிகுர் ரஹீம் 40 என சொற்ப ஓட்டங்களில் முன்வரிசை வீரர்களை இழந்தது.
ரமேஷ் மெண்டிஸ் 3, பிரவீன் ஜெயவிக்ரம 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
லிட்டன் தாஸ் 14 ஓட்டங்களுடனும், மெஹிடி ஹசன் மிராஸ் 4 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.




