அமெரிக்காவின் புளோரிடா கடலோர பகுதியில், டால்பின் கூட்டத்துடன், அரிய வகை வெள்ளை டால்பின் குட்டி நீந்தி செல்லும் காட்சி தென்பட்டு உள்ளது.
அரிய வகை வெள்ளை டால்பின் குட்டி, நீந்தும் வீடியோ, இணையத்தில் பெரும் விவாதப்பொருளாக மாறி உள்ளது. அமெரிக்காவின் புளோரிடா கடலோர பகுதியில், கெய்ட்லின் மேக்கே எடுத்த வீடியோவில், 2 டால்பின் குட்டிகள் என 3 டால்பின்கள் நீந்தி செல்வது தெரிந்தது. இது பலருக்கும் சாதாரண வீடியோ போன்று தான் தெரிந்தாலும், கெய்ட்லின் மேக்கேவிற்கு, இது அசாதாரண வீடியோ என்பது தெரிந்தது. அப்படி என்ன இந்த வீடியோவில், அசாதாரண நிகழ்வு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
ஆம். நிச்சயம் இது அசாதாரண வீடியோ தான். ஏனெனில், அந்த 2 டால்பின் குட்டிகளில் ஒன்று அரிய வகை வெள்ளை டால்பின் குட்டி ஆகும். வெள்ளை நிறத்தில் இருக்கும் நிகழ்வு, அல்பீனிசம் என்று குறிக்கப்படுகிறது. டால்பின் போன்ற பாலூட்டி வகைகளில், 10 ஆயிரத்திற்கு ஒன்று என்ற அளவில் இந்த அரிய வகை அல்பீனிச நிகழ்வு ஏற்படுவதாக நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
https://www.ndtv.com/video/news/news/albino-dolphin-calf-spotted-watch-rare-white-dolphin-calf-spotted-swimming-in-florida-584287?t=15
பாக்ஸ் 13 செய்தி நிறுவனத்திற்கு கெய்ட்லி மேக்கே அளித்துள்ள பேட்டியில், நான் இதுவரை எல்லா வகை டால்பின்களையும் பார்த்து உள்ளேன். ஆனால், இதுபோன்ற அரிய வகை வெள்ளை டால்பினை, இப்போதுதான் முதல்முறையாக பார்த்து உள்ளேன் என்று தெரிவித்து உள்ளார்.
திமிங்கலங்கள், டால்பின்கள், போர்போய்ஸ்கள் உள்ளிட்டவைகளில் 21 அல்பினோ இனங்கள் உள்ளதாகவும், இதில், 20 அல்பினோ டால்பின்கள், மெக்ஸிகோ வளைகுடா பகுதிகளிலேயே தென்படுவதாக கடல்சார் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.