தனது மனைவி அனுஷ்கா சர்மாவை முதன்முதலில் பார்த்தபோது ஒரு முட்டாள் போல் நடந்து கொண்டதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை மணந்துகொண்டார். இந்நிலையில் அனுஷ்கா சர்மா இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்கிடையில் அனுஷ்கா சர்மாவை முதன்முதலில் பார்த்தபோது ஒரு முட்டாள் போல நடந்து கொண்டதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவிற்கு தனியாக ரசிகர் பட்டாளம் உள்ளது. இவரை சமூக வலைதளத்தில் சுமார் 50 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். தற்போது இந்த ஜோடி மும்பையில் வசித்து வருகின்றனர். முதல் முதலில் அனுஷ்கா சர்மாவை ஷாம்பு விளம்பரத்தில் ஒன்றில் சந்தித்தார் விராட் கோலி. அதன்பிறகு 2014 முதல் இந்த ஜோடி டேட்டிங் செய்ய துவங்கினார். இந்நிலையில் தனது மனைவி அனுஷ்கா சர்மா முதன்முதலில் பார்த்தபோது முட்டாள் போல் நடந்து கொண்டதாக தெரிவித்த கோலி, அவரிடம் ஒரு ஜோக்கை தெரிவித்ததாகவும் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விராட் கோலி கூறுகையில், “நான் முதல் முதலில் அனுஷ்காவை பார்த்த பொழுது உடனடியாக அவருக்கு ஒரு ஜோக் சொன்னேன். ஏனென்றால் அப்பொழுது நான் மிகவும் பதட்டமாக காணப்பட்டேன். அதனால் தான் அந்த ஜோக்கை அவரிடம் சொன்னேன். அந்த சந்திப்பின்போது அனுஷ்கா சர்மா சற்று என்னைவிட உயரமாகவும் காணப்பட்டார். அதை பார்த்த நான், உடனடியாக இதை விட உங்களுக்கு உயரமான ஹீல்ஸ் ஒன்று கிடைக்கவில்லையா? என்று சொன்னேன். அதற்கு அவர் ஆத்திரமாக காணப்பட்டார். தொடர்ந்து நான் இதை வேடிக்கைகாகத் தான் சொன்னேன் என்று தெரிவித்தேன். ஆனால் அது ஒரு மொக்க ஜோக் என்பது எனக்கே தெரியும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் ஒரு முட்டாள் போல நடந்து கொண்டேன்” என்றார்.
கடந்த டிசம்பர் மாதம் 2017 ஆம் ஆண்டு விராட் கோலி, அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 2021ல் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. தனது குழந்தையின் வருகையை காண விராட் கோலி பார்டர் கவஸ்கர் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் போட்டிக்கு பி ந் இந்தியா வந்தார். தற்போது வரை அனுஷ்கா சர்மா பெரும்பாலும் விராட் கோலி பங்கேற்கும் போட்டிகளில் உடன் செல்வார். முன்னதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரின் போதும், இந்தியா இங்கிலாந்து தொடரின் போதும், தற்போது பெங்களூர் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் பொழுதும் விராட் கோலியுடன் பாதுகாப்பான வளையத்திற்குள் அனுஷ்கா சர்மா தொடர்ந்து அவருக்கு ஆதரவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.