தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் போலீஸ் அதிகாரி அர்ஜுன் குமார் என்னும் கதாபாத்திரத்தில் சஸ்பென்ட் ஆன Police Officer ஆக மாஸ் காட்டி வருகிறார். தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை படங்களை இயக்கிய H.வினோத் இந்த படத்தை இயக்கி வருகிறார். பிரபல இந்திப் பட தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார்.
இந்த நிலையில் அஜித்தின் பிறந்தநாள் ஆன இன்று நிறைய திரைப்பிரபலங்கள் அவளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள். அதில் சிவகார்த்திகேயன் வெளியிட்ட போட்டோ ஒன்று பயங்கர வைரல் ஆகியுள்ளது. பதிமூன்று பதினான்கு வருடங்களுக்கு முன்பு அஜித் நடித்த ஏகன் படத்தில் சிவகார்த்திகேயனும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
படத்தின் நீளம் காரணமாக அந்த காட்சி நீக்கப்பட்டது. அந்த காட்சியின் புகைப்படத்தை தற்போது அஜித்தின் பிறந்த நாளுக்கு சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். சொல்லியா தெரிய வேண்டும் அந்த போட்டோ செம்ம வைரல்.