வாழைச்சேனை தவிசாளரின் வாகனம் மோதி மாடுகள் பலி: அவசரமாக அகற்றப்பட்டன!

Date:

வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளர் திருமதி சோபா ரஞ்சித்தின் உத்தியோகபூர்வ வாகனம் மோதி, 3 மாடுகள் உயிரிழந்துள்ளன. எனினும், அவர் சம்பவத்தை மறைக்கும் விதமாக கால்நடைகளை அங்கிருந்து அகற்றியதாக பிரதேச மக்கள் குற்றம்சுமத்துகின்றனர்.

இன்று (2) மாலை இந்த சம்பவம் நடந்தது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சித் தலைவர் சி.சந்திரகாந்தன் கலந்து கொண்ட நிகழ்வொன்று சுங்கான்கேணியின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்சில் கலந்து கொள்வதற்காக, மட்டக்களப்பிலிருந்து சோபா ரஞ்சித் உத்தியோகபூர்வ வாகனத்தில் வந்தார்.

சந்திவெளி வேப்பையடி பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையில் வீதியில் மாடுகளை மோதித்தள்ளியது. இதில் 3 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

இதனால் அந்த பகுதியில் கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டது. உபதவிசாளர், சில உறுப்பினர்களை சம்பவ இடத்திற்கு அழைத்த தவிசாளர், நிலைமை விபரீதமாவதை தவிர்த்துக் கொண்டார்.

மேலும், நிலைமை மோசமாவதற்கு முன்னதாக பிரதேசசபை உழவு இயந்திரத்தை வரவழைத்து உயிரிழந்த மாடுகளை அப்புறப்படுத்தியுள்ளார். மாட்டு உரிமையாளர் அந்த இடத்திற்கு வருவதற்கு முன்னதாகவே, உயிரிழந்த மாடுகளின் சடலங்களை தவிசாளர் அப்புறப்படுத்தினார்.

இதேவேளை, மக்களின் வரிப்பணத்திலான பிரதேசசபை சொத்தான வாகனத்தை, தவிசாளர் நீண்டகாலமாக தனது சொந்த தேவைக்கும் பயன்படுத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டு உண்டு.

வாகரைக்கு மீன் வாங்க செல்வதானாலும் சரி, தான் கல்வி கற்பிக்கும் பாடசாலையில் வாரத்திற்கு 3 நாட்கள் செல்வதென்றாலும், மட்டக்களப்பு நகரில் தங்கியிருந்து கல்வி கற்கும் பிள்ளையை பார்வையிட செல்வது என அனைத்து தேவைகளையும் பிரதேசசபை வாகனத்தை பயன்படுத்துவதாக நீண்டகாலமாக குற்றச்சாட்டு உண்டு.

இந்த நிலையில் வாகனம் இன்று மாடுகளை மோதிக் கொன்றுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL)...

தமிழ் தேசம் ஜோதிலிங்கம் ஐயாவை இழந்துவிட்டது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆழ்ந்த இரங்கல்

ஆசிரியர், வழக்கறிஞர், அரசியல் ஆய்வாளர் என்ற எல்லைகளைத் தாண்டித் தமிழ் தேசத்தின்...

அனோஜனின் உயிரைக் காக்கப் பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்