26.3 C
Jaffna
January 15, 2025
Pagetamil
சினிமா

யுவன் மகளுக்கு பியானோ வாசிக்கக் கற்றுக் கொடுத்த இளையராஜா!

இசையமைப்பாளரும், தயாரிப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது தன் புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்கிறார். ரசிகர்கள், ரசிகைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்.

தன்னை மதத்தின் அடிப்படையில் விமர்சித்தால் அவர்களுக்கு ஏற்றது போன்று நறுக்கென்று பதில் அளிக்கிறார். அப்படி அவர் அண்மையில் அளித்த பதில் பலரையும் கவர்ந்தது.

இந்நிலையில் தன் செல்ல மகள் ஜியாவுக்கு தாத்தா இளையராஜா பியானோ வாசிக்கக் கற்றுக் கொடுத்தபோது அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் யுவன். அந்த வீடியோவுக்கு லைக்குகள் வந்து குவிந்துள்ளது.
இளையராஜா பியானோ வாசித்துக் காட்ட ஜியாவின் கவனமோ வேறு எங்கோ சென்றுவிட்டது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

யுவனை இஸ்லாமியர் என்பதற்காக விமர்சிப்பவர்களுக்கு இந்த வீடியோ தான் பதிலடி. அவரின் அப்பாவுக்கே யுவன் மதம் மாறியதில் பிரச்சனை இல்லையாம். உங்களுக்கு என்ன வந்தது?

ஜியாவை தாத்தாவுடன் சேர்ந்து பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. தாத்தா, அப்பா வழியில் இசையமைக்கப் போகிறாரோ?.அடிக்கடி இது போன்று இளையராஜா, ஜியா வீடியோவை வெளியிடுங்கள் யுவன். பார்க்கவே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.

https://www.instagram.com/p/COQuJanj4o4/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

யுவனை மதத்திற்காக அடிக்கடி சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள். மேலும் அவரின் மனைவியையும் விளாசுகிறார்கள். யுவனின் மனைவி தன்னை விமர்சிப்பவர்களுக்கு தக்க பதில் அளித்து வருகிறார்.

கெரியரை பொறுத்தவரை யுவன், அஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரம்ஜான் பண்டிகை அன்று வெளியிடப்படுகிறது.

இது தவிர்த்து தனுஷ் தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் நானே வருவேன் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைக்கவிருக்கிறார். யுவன், செல்வராகவன், தனுஷ் கூட்டணி வெற்றிக் கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

விபத்தில் சிக்கிய அஜித்தின் நலம் குறித்து ஆர்வம் காட்டிய அருண் விஜய்

east tamil

‘த கோட்’ படத்தால் மன அழுத்தம்: நடிகை மீனாட்சி சவுத்ரி வருத்தம்

Pagetamil

நடிகை ஹனி ரோஸ் புகார் – கேரள தொழிலதிபர் கைது

Pagetamil

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

Pagetamil

Leave a Comment