நாளை முதல் தனியார் பேருந்து சேவை 25% ஆக குறைக்கப்படுகிறது!

Date:

நாளை (3) முதல் அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகளின் சேவையை 25% ஆக குறைக்க இலங்கை  தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன, பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியேற்பட்டுள்ளதால் இந்த முடிவு எட்டப்பட்டதாகக் கூறினார்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக தனியார் பேருந்துகள் 90% திறனில் சேவையை வழங்கியதாகவும், தற்போது பயணிகளின் வீழ்ச்சியால் 50% க்கும் குறைவான திறனிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றார்.

பாடசாலைகள் மற்றும் கல்வி வகுப்புகளும் மூடப்பட்டிருக்கும் வேளையில் தனியார் மற்றும் அரசுத் துறையில் பல அலுவலகங்கள் மூடப்பட்டிருப்பதால் பேருந்து சேவைகள் நாளை முதல் 25% ஆக குறைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

குறைந்த பயணிகள் காரணமாக எரிபொருள் செலவையே  ஈடுசெய்ய முடியவில்லை என்று அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

பல்கலை, உயர்கல்வி நிறுவனங்களில் விடுதி வசதிகளை விரிவுபடுத்த திட்டம்

இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2026...

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராக மனு!

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி...

மதுபானசாலைகளற்ற வலி வடக்கில் மதுபானசாலைக்கு அனுமதியா?” — வீதியில் இறங்கிய மக்கள்

மதுபானசாலைகளற்ற பிரதேசமாக காணப்படும் வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்