கொத்துக் கொத்தாக செத்து மடிந்த மீன்கள்; பதறவைக்கும் அதிர்ச்சி பின்னணி!

Date:

லெபனான் நாட்டில் உள்ள லித்தானி நதிக் கரை அருகே உள்ள ஏரியில் கொத்துக் கொத்தாக ஏராளமான மீன்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. இதனால் அருகே கிராமம் துர்நாற்றத்தால் சூழ்ந்துள்ளது.

மீன்கள் இறந்ததற்கு தண்ணீர் மாசுபாடுதான் காரணம் என உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஏரிக் கரையில் ஒதுங்கிக் கிடக்கும் இறந்த மீன்களை தன்னார்வலர்கள் சேகரித்து அகற்றி வருகின்றனர்.

கழிவுநீரால் தண்ணீர் மாசுபாடு அதிகரித்து வருவது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக எச்சரிந்து வந்தனர். இந்நிலையில், மீன்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீன்கள் அகற்றப்பட்ட இடங்களில் ஏராளமாக குப்பைகளும் கிடக்கின்றன. இதுபோக, பூச்சிகள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன. ஏற்கெனவே மாசுபட்ட் அழுக்கு நீரில் மீன்கள் அழுகிக் கொண்டிருப்பது கடும் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த சில நாட்களிலேயே 40 லட்சம் மீன்கள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்விவகாரம் குறித்து லித்தானி நீர் ஆணையம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மெட்ரோ பேருந்துகளை சேதப்படுத்தும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை

கொழும்பு நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 'மெட்ரோ' (Metro)...

ரொனால்ட்டோவை இடைநீக்கம் செய்தது போர்ச்சுக்கல் கால்பந்து கூட்டமைப்பு

அணியை விட்டு வெளியேறியதற்காக கிறிஸ்டியானோ ரொனால்டோவை போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு இடைநீக்கம்...

அமெரிக்காவில் வீடொன்றில் 8 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில், இரண்டு குழந்தைகள் உட்பட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்