26.8 C
Jaffna
December 14, 2024
Pagetamil
குற்றம்

யாழ், கிளி, முல்லை மாவட்டங்களை கலக்கிய ‘திருட்டு குடும்பம்’ சிக்கியது; 2 பெண்கள்: 150 பவுண் வரை கொள்ளை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற 8 கொள்ளைச் சம்பவங்கள் அடங்கலாக முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்தும் வங்கிகளில் வைப்புக்களில் இருப்பதுமாக சுமார் 50 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதோடு இவர்களால் சுமார் 150 பவுன் வரையான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த குற்றச்செயல்களில் பிரதான சூத்திரதாரி வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியை சேர்ந்தவர் எனவும் இவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் போதைப்பொருள் வியாபார நடவடிக்கைகளில் தொடர்புடையவர் எனவும் தெரியவருகிறது.

வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியை சேர்ந்த பிரதான சூத்திரதாரி சுழிபுரம் பகுதியை சேர்ந்த இவருடைய மனைவி இவருடைய மருமகன் மற்றும் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் வசிக்கும் இவருடைய அக்கா மற்றும் அவருடைய மகன் ஆகியோரே இந்த கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்களில் 3 ஆண்களும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் அவர்கள் கொள்ளையிடும் நகைகளை குறித்த இரு பெண்களும் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்துவந்துள்ளதோடு கிளிநொச்சி மக்கள் வங்கி உள்ளிட்ட இடங்களில் அடைவு வைத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

புதுக்குடியிருப்பில் அண்மையில் இடம்பெற்ற 8 கொள்ளை சம்பவங்களும் இவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கோம்பாவில் பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் ஒன்றின் சி சி ரி வி காணொளி உதவியுடன் முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகளின் ஆலோசனைக்கமைய புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பாகிகாரி அமரசிங்க அவர்களின் வழிகாட்டலில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் இந்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களால் புதுக்குடியிருப்பில் 8 கொள்ளை சம்பவங்களும் கிளிநொச்சியில் 3 கொள்ளை சம்பவங்களும், யாழ்ப்பாணத்தில் 2 கொள்ளை சம்பவங்களும், முல்லைத்தீவில் 2 கொள்ளை சம்பவங்களும் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் புதுக்குடியிருப்பு பொலிசார் குறித்த நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மனைவியை கொன்ற கணவன்!

Pagetamil

கனடா போயும் திருந்தாத யாழ்ப்பாண கணக்காளர்: ஓசிக் குடிக்கு ஆசைப்பட்டு விமானத்தில் சிக்கிய பரிதாபம்!

Pagetamil

யாழில் பூசகரை கட்டி வைத்து கொள்ளை: பெண் உள்ளிட்ட 2 பேர் கைது!

Pagetamil

74 வயது மூதாட்டியை வல்லுறவுக்குள்ளாக்கி 5000 ரூபா கொள்ளையடித்த 31 வயது திருடன் கைது!

Pagetamil

யாழில் காதலனுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வைத்து யுவதியிடம் கப்பம் பெற முயன்ற 2 பொலிசார் கைது!

Pagetamil

Leave a Comment