மட்டக்களப்பு காட்டுக்குள் இரகசியமாக அமைக்கப்படும் பௌத்த மத்திய நிலையம்: காட்டுக்குள் அதிரடியாக நுழைந்தது கூட்டமைப்பு!

Date:

மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலர் பிரிவில் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலத்தில் நூற்றிற்கும் அதிக ஏக்கர் நிலப்பரப்பை சுருட்டி, பௌத்த மத்திய நிலையம் அமைக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புளுட்டுமானோடை பகுதியிலுள்ள காட்டு பகுதியில், பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கான முன்னாயத்தங்கள் இடம்பெற்று வருகிறது.

சில தினங்களின் முன்னர் பிக்குகள் சிலர் அங்கு வந்து இடத்தை உறுதி செய்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோ.கருணாகரம், எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.அரியநேத்திரன் உள்ளிட்டவர்கள் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.

பாதையற்ற பகுதியான அங்கு, சுமார் 7 கிலோமீற்றர் தூரத்தை கால்நடையாகவே கடக்க வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

அனோஜனின் உயிரைக் காக்கப் பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண...

விபத்தில் பின்னாலிருந்த காதலி மரணம்: காதலன் எடுத்த விபரீத முடிவு!

பாடசாலைப் பருவத்திலிருந்தே காதலித்து வந்த இளம் பெண் ஒருவர், தனது காதலனுடன்...

ஷிராந்தி இன்று தேசிய கண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிராந்தி ராஜபக்ஷவை, கொழும்பு தேசிய கண் மருத்துவமனையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்