Pagetamil
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்திற்கு மேலும் 2 வார அவகாசம் தேவை!

இரண்டு வாரத்தின் பின்னர்  காணாமல் போனோர்  விடயத்தை  கையாண்டு தீர்க்கும் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில்  காலை பதினோரு மணியளவில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது

இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அமைச்சரிடம் ஊடகவியலாளர் ஒருவர் காணாமல் போனோர் தொடர்பில் ஒரு மாதத்துக்குள் தீர்வுகள் முன்வைக்கப்படும் என அண்மையில் கூறியிருந்தீர்கள் அதன் நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளது என வினவினார்

இதற்க்கு பதிலளித்த மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதில் முன்னேற்றம் உள்ளது நேற்றும் ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடினேன். அதனை விட கொடிய நோய் ஒன்று உலகளாவிய ரீதியில் பரவியிருக்கிறது ஆனபடியினால் நாங்கள் இருவரும் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வந்திருந்தோம் சற்று பொறுத்து ஒரு இரண்டு வாரத்தின் பின்னர்  அந்த விடயத்தை கையாண்டு தீர்க்கும் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம் என்றார்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி அதிகரிப்பு

east tamil

சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்

east tamil

சமஷ்டி ஆட்சி அமைத்தால் நாடு அபிவிருத்தி அடையும் – சிறிநேசன் எம்.பி

east tamil

பிரித்தானியாவின் இந்து பசிபிக் வலயத்துக்கான அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

east tamil

பேர வாவி பறவைகள் உயிரிழப்புக்கு விசம் காரணம்?

Pagetamil

Leave a Comment