மன்னாரில் தனிமைப்படுத்தல் விதி முறைகளை மீறி பக்தர்களை ஒன்று கூட்டி திருவிழா திருப்பலி இடம் பெற்ற இரண்டு தேவாலயங்கள் இன்றைய தினம் சனிக்கிழமை (1) காலை தனிமைப் படுத்தப்பட்டுள்ளன.
நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள கற்கடந்த குளம் மற்றும் அச்சங்குளம் பகுதியில் உள்ள இரண்டு தேவாலயங்களிலும் இன்றைய தினம் திருவிழா திருப்பலி இடம்பெற்றது.
இந்த நிலையில் தனிமைப்படுத்தல் விதி முறைகளை மீறி பக்தர்களை ஒன்றுகூட்டி திருவிழா மேற்கொண்ட குற்றச்சாட்டில் குறித்த இரண்டு ஆலயங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இன்றில் இருந்து எதிர்வரும் 14 நாட்களுக்கு குறித்த இரு ஆலயமும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
+1
+1