இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஆடிய பங்களாதேஷ் அணி, 251 ஓட்டங்களிற்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இலங்கை சார்பில், அறிமுக டெஸ்டில் ஆடி வரும் 22 வயதான பிரவீன் ஜெயவிக்ரம 92 ஓட்டங்களிற்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 493 ஓட்டங்கள் என்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.
தற்போது இலங்கை 242 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கிறது. பங்களாதேஷ் அணி தனது கடைசி 7 விக்கெட்டுக்களையும் 37 ஓட்டங்களிற்கு பறிகொடுத்தது. இலங்கை பொலோ ஓன் கொடுக்காமல் இரண்டாவது இன்னிங்ஸை ஆடுகிறது.
3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 2 விக்கெட் இழப்பிற்கு 17 ஓட்டங்களை பெற்றுள்ளது. லஹிரு திரிமன்ன 2, ஓஷத பெர்னாண்டோ 1 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர்.
அறிமுக டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய 5வது இலங்கை வீரர் பிரவீன் ஜெயவிக்ரம ஆவார்.
